• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-12 17:50:05    
வெள்ளரிக் கோழி

cri

கலை.....வணக்கம் நேயர்களே. இப்போது சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி நேரம். ராஜாராம், கலையரசி இருவரும் இந்த நிகழ்ச்சியில் வெள்ளரிகாய் கலந்த கோழிக்கறி சமையல் பற்றி கூறுவோம்.

ராஜா.......கலை, கடந்த இரண்டு நிகழ்ச்சிகளில் முட்டைகோசு, வெள்ளரிகாய் பற்றி சொன்னோம். இந்த முறை கோழிக் கறி சமையல் பற்றி நண்பர்களுக்கு சொல்லி பசியாற்றலாமா?

கலை....... சரி, நீங்கள் சொன்னது சரிதான். இந்த முறை மக்களுக்கு விருப்பமான கோழிக்கறி சமைப்பது விளக்கலாம்.

ராஜா.......தமிழ் நாட்டில் மசாலா சிக்கன், கோழிக் குழம்பு, கோழிவறுவல் என்று விதவிதமான கோழிக்கறி உணவுகள் உண்டும். இன்று நண்பர்களுக்கு என்ன வகை கோழிக் கறி சொல்லப் போகின்றோம்?

 

கலை.......ராஜா நீங்கள் பாருங்கள். பல்வகை கோழி கறிகள் பற்றி சொன்னீர்கள். இன்று நாம் சொல்லப்போவது சீன முறையில் சமைக்கப்படும் கோழிக்கறி.

ராஜா........இந்த கறி சமைப்பதற்கு என்ன பொருட்கள் தேவை?

கலை......முதலில் முக்கியமான தேவை கோழிதான். இந்த கோழி முழுக் கோழியில்லை. எலும்பு இல்லாத கோழி மார்புக் கறி இருந்தால் போதும். ஒரு வெள்ளரிகாய், சிவப்பு முள்ளங்கி ஒன்று, மசாலா பொருள், ஒரு கரண்டி வினிகர், மூன்று கரண்டி சர்க்கரை, ஒரு தேக்கரண்டி கரு மிளகு.

ராஜா........இந்த பொருட்களை சேகரிப்பது இன்னல் இல்லை. சமைப்பது எளிதானதா?

கலை........பொருட்களை சேகரிப்பது போலவே சமைப்பதும் எளிதானதுதான். முதலில் ருசிக்கும் ஏற்ப சர்க்கரையும் வினிகரும் கலக்க வேண்டும். இதில் சோயாசாஸ் ஊற்ற வேண்டும். தமிழகத்தில் இது கிடைக்காவிட்டால் கொஞ்சம் தண்ணீர் விடுங்கள்.

ராஜா........அப்படி செய்தால் ருசி குறையாதா?

கலை.......ஏதோ கொஞ்சம் குறையும். பரவாயில்லை. தமிழகத்தில் சோயாசாஸ் உண்ணூம் வழக்கம் இல்லை. இது முக்கியமாக கறியின் சுவையை பாதிக்காது.

ராஜா......சரி அப்புறம் என்ன செய்ய வேண்டும்?

கலை.....கோழியின் .மார்ப்புக் கறியை வென்னீரில் போட்டு வேகவைத்து வெந்த பிறகு வெளியே தட்டில் எடுத்து வைத்து ஆறிய பின் துண்டு துண்டாக நறுக்க வேண்டும்.