ஜின்ஷான் என்னும் இடம், சீனாவின் மிக பெரிய வணிக மற்றும் தொழில் நகரான ஷாங்காயின் தென்பகுதியிலுள்ள பறநகராகும். சீன மொழியில் அதற்கு, செல்வமான இடம் என்று பொருள். ஆனால், நீண்டகாலமாக, ஷாங்காயின் வேறு வட்டாரங்களை விட, இவ்விடத்தின் பொருளாதார வளர்ச்சி பின்தங்கிய நிலையில் இருந்தது மட்டுமல்ல, சீனாவின் கிழக்கு வட்டாரத்தின் சராசரி நிலையைக் கூட எட்ட முடியாமல் இருந்தது. ஆனால், அந்த நிலைமை கடந்த சில ஆண்டுகளில் படிப்படியாக மாறி விட்டது.
முன்பு, ஜின்ஷானில் வாழும் மக்கள் வேளாண் தொழிலில் ஈடுபட்டதால், வருமானம் மிகவும் குறைவாகவே கிடைத்தது. சூங் ஜியே என்பவரின் குடும்பம் இப்படித்தான் அல்லல்பட்டது. அவர் எமது செய்தியாளரிடம் பேசுகையில், தற்போது, கிராமவாசிகள் மேலும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்று கூறினார். அவர் கூறியதாவது:
வாழ்க்கை சூழலைப் பார்த்தால், முன்பு கிராமவாசிகள் மாடி வீடுகளில் குடியிருக்கவில்லை. தற்போது பெரும்பாலோர் மாடி கட்டிடங்களில் வாழ்கின்றனர். போக்குவரத்து மிகவும் வசதியாக மாறியுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் சிமென்ட் சாலை போய்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் முதியோருக்கான பொழுதுபோக்கு இடம், மருத்துவ சிகிச்சை நிலையம், உடல் பயிற்சி நிலையம் ஆகியவை நிறுவப்பட்டுள்ளன என்றார் அவர்.
கடந்த மூன்று ஆண்டுகளில், ஜின்ஷான், வேளாண் உற்பத்தியில் ஈடுபடும் புறநகர் என்ற நிலையில் இருந்து, ஒரு தொழில்மய நகராகவும், முதலீட்டு இடமாகவும் மாறியுள்ளது. உள்ளூர் அரசின் தொடர்புடைய அதிகாரி லீயு சாங் சியான் இது பற்றி விளக்கினார்:
கடந்த ஆண்டில், இவ்வட்டாரத்தின் மொத்த தொழில் துறை உற்பத்தி, 6100 கோடி யுவானைத் தாண்டியது. வேதியியல் தொழில் துறை, மருத்துவம் மற்றும் மருந்துகள், இயந்திரம் மற்றும் மின்னணு, நெசவு மற்றும் ஆடைகள், வாகனம் ஆகியவற்றை முக்கியமாக கொண்ட முதுகெலும்பு தொழில் துறை உருவாகியுள்ளது என்றார் அவர்.
குறுகிய காலத்தில் இந்தப் புறநகரின் தொழில் துறை இவ்வளவு வேகமாக வளர்ச்சியடைந்ததற்கு என்ன காரணம்?இக்கேள்விக்குப் பதிலளிக்க, ஜின்ஷானின் வேதியியல் தொழில் துறை பற்றி கூற வேண்டும்.
1979ம் ஆண்டில், ஜின்ஷானில், ஷாங்காய் எண்ணெய் மற்றும் வேதியியல் தொழில் நிறுவனம் நிறுவப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில், வேதியியல் தொழில் துறையின் முன்னேற்றத்தால் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்படும் பயனை உள்ளூர் அரசு நன்கு புரிந்துக்கொண்டு, பல வேதியியல் தொழிற்சாலைகளை உருவாக்க முடிவு செய்தது.
2010ம் ஆண்டில், ஜின்ஷானில் 60 சதுர கிலோமீட்டர் பரப்பில் வேதியியல் தொழில் மண்டலம் உருவாக்கப்படும். அதே வேளையில், தொடர்புடைய பின்னணி சேவை தளம், ஏற்படுத்தப்படும். தற்போது, ஷாங்காய் வேதியியல் ஆய்வகம், ஜெர்மனின் ஹென்கல், அமெரிக்காவின் APATURE முதலிய பல தொழில் நிறுவனங்கள் இங்கே வந்து வேதியியல் தொழில் துறையில் முதலீடு செய்கின்றன.
எனினும், வேதியியல் தொழில் துறையின் வேகமான வளர்ச்சி மட்டும் ஜின் ஷானில் தலைகீழ் மாற்றம் ஏற்படுவதற்கான காரணம் அல்ல. 2003ம் ஆண்டில், புதிய உயர் தொழில் நுட்ப தொழில் துறை மண்டலத்தைக் கட்டி, மின்னணு தகவல், இயந்திர தயாரிப்பு, உயிரி மருந்து, புதிய ரக மூல பொருட்கள் ஆகிய தொழில் துறைகளை வளர்க்கவும், இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை உயர்த்தவும் உள்ளூர் அரசு விரும்புகிறது.
|