• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-11 18:42:38    
பதினைந்தாவது ஆசிய விளையாட்டு போட்டிகள்

cri

பதினைந்தாவது ஆசிய விளையாட்டு போட்டிகள் டிசம்பர் திங்கள் முதல் நாள் தொடக்கம் 15ம் நாள் வரை நடைபெறவுள்ளன. அக்டோபர் 8ம் நாள் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான தீபம் ஏற்றப்பட்டு, பதினைந்து நாடுகள் மற்றும் பிரதேசங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் ஏந்திச் செல்ல, 50 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறும் தோஹா வந்தடையும் என அறியப்படுகிறது. நிலம், நீர், வானம் என பல வழிகளுனூடாக கொண்டுசெல்லப்படும் இந்த ஆசிய தீபம், மிதிவண்டி, கப்பல், குதிரை, ஒட்டகம், ரயில் என பல்வகை போக்குவரத்து சாதங்களின் துணையோடு பயணிக்கும். 50 நாட்களுக்கு மேலாக பவனி வரும் இந்த தீபத்தை குறைந்தது 3500 பேர் இந்த பயணத்தின் போது சுமந்து செல்வார்கள். ஆசிய விளையாட்டு போட்டிகள் வரலாற்றில் மிக நீண்ட ஆசிய தீபப் பயணம் இதுவாகவே அமையும் என்று கூறப்படுகிறது. டிசம்பர் 1 முதல் 15 வரை நடைபெறும் இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் 45 நாடுகள் மற்ரும் பிரதேசங்கள் கலந்துகொள்ளவுள்ளன. 39 வகை விளையாட்டுகளின், 423 வகை பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டியில் 3200 மேற்பட்ட பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்:

கிராண்ட் ஸ்லாம் எனப்படும் டென்னிஸ் விளையாட்டின் பெரிய பரிசுத்தொகை மற்றும் பிரசித்தி பெற்ற போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டப் போட்டிகள் ஆகஸ்ட் 27ம் நாள் தொடக்கம் செப்டம்பர் 10ம் நாள் வரை நடைபெறுகின்றன. கடந்த 21 வருடங்களாக டென்னிஸ் விளையாட்டில் தனக்கென தனி முத்திரை பதித்த அமெரிக்க வீரர் ஆந்த்ரே அகாசி இந்த போட்டியோடு டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தபடியால் பரவலான எதிர்பார்ப்பும், ஆதரவும் அவருக்கென இருந்தது. 36 வயதிலும் ஓடி ஆடி அவர் வெற்றி மேல் வெற்றியாக பெற்றதால், இறுதி போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று தனது ஓய்வை சிறப்பாக்குவாரோ என்ற எண்ணம் எழுந்த நிலையில், ஜெர்மன் நாட்டு பெஞ்சமின் பெக்கர் என்ற வீரரிடம் தோல்வியைத் தழுவினார் அகாசி. 4 செட்கள் நீடித்த பந்தயத்தின் முடிவில் கண்ணீர் மல்க விடைபெற்றார் அவர்.

21 வருடகால டென்னிஸ் வாழ்க்கையில் அவர் கிராண்ட் ஸ்லாம் எனப்படும் டென்னிஸ் விளையாட்டின் பெரிய பரிசுத்தொகை மற்றும் பிரசித்தி பெற்ற போட்டிகளை 7 முறை வென்றுள்ளதோடு, மாஸ்டர்ஸ் எனும் தலைசிறந்த ஆட்டக்காரர்கள் விளையாடும் போட்டிகளில் 17 முறை வென்றுள்ளார். மொத்தத்தில் ஒற்றையர் ஆட்டத்தில் 60 பட்டங்களை வென்றவர் அவர். அமெரிக்க ஓபன் போட்டிகளில் தொடர்ந்து 21 முறை பங்கேற்ற பெருமையும் அவருக்கு உண்டு.

இதனிடையில் டென்னிஸ் விளையாட்டின் இளம்புயல் ரஃபேல் நடாலுக்கும், உலகத்தரவரிசையில் அவருக்கு ஒரே சவாலக நிற்கும் ரோஜர் ஃபெடரருக்கும் இடையில் இந்த போட்டியின் வெற்றியாளர் யார் என்ற போட்டி நடைபெறும் என்ற எதிர்பார்ப்புகள் பொய்த்துள்ளன. ரஃபேல் நடாலின் அமெரிக்க ஓபன் சாம்பியன் வெற்றிக்கு ஃபெடரர் இறுதியில் தடையாகும் நிலைக்கு முன்பேயே, ரஷ்ய நாட்டு மிக்கேல் யூஸ்னி என்பவர் நடாலை ஆட்டத்திலிருந்து வெளியேற்றியுள்ளார். 4 செட் நீடித்த பந்தயத்தில் உலகத் தரவரிசையின் 2வது இடத்தில் உள்ள ரஃபேல் நடாலை 54வது இடம் வகிக்கும் யூஸ்னி வென்றது குறிப்பிடத்தக்கது.