இவ்வாண்டின் முதல் எட்டு திங்களில், சீனாவின் அன்னிய வர்த்தகத்தில் ஏற்றுமதி இறக்குமதி மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 460 அமெரிக்க டாலர் மதிப்பை எட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட சுமார் 24 விழுக்காடு அதிகம் என்று சீனச் சுங்கத் துறையின் தலைமை அலுவலகம் இன்று வெளியிட்ட புதிய புள்ளி விவரம் காட்டுகின்றது. இவ்வாண்டின் முதல் எட்டு திங்களில், சீனாவின் அன்னிய வர்த்தகத்தில், வர்த்தக உபரி, 9560 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆசியான், சீனாவின் முதல் நான்கு பெரிய வர்த்தக கூட்டாளிகளாக உள்ளன. இவற்றுடன் சீனா நடத்திய இரு தரப்பு வர்த்தகம், 10 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது.
|