
2006ம் ஆண்டு ஹூநான் சுற்றுலா விழா இன்று சீனாவில் புகழ் பெற்ற புத்தமத மலையான Heng Shan மலையில் துவங்கியது. ஹூநான் மாநிலத்தின் இயற்கை காட்சிகளும் தேசிய இனப் பண்பாடும் இவ்விழாவில் சீன மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு காண்பிக்கப்படும். தலைசிறந்த சுற்றுலாக் காட்சி, வெளிப்புற விளையாட்டுப் போட்டி, சுவையான உணவு விழா, வாண வேடிக்கைகள் முதலியவை, சுற்றுலா விழா நாட்களில் நடத்தப்படும். ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் முதலிய பல நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுற்றுலா வணிகர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். கடந்த ஆண்டு, இம்மாநிலம், 7 கோடிக்கு அதிகமான உள்நாட்டு வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்றது.
|