சீனத் தயாரிப்புத் தொழிலின் ஆற்றல் உயர்வு
cri
சீனாவின் தயாரிப்புப் பொருட்களின் போட்டியாற்றல் பற்றிய ஆய்வின் முடிவினை சீன அரசு இன்று முதன்முறையாக வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு, சீனத் தயாரிப்புப் பொருட்களின் போட்டி ஆற்றலின் குறியீட்டு எண், 78.98 ஆக இருந்தது. தொடர்ந்து 7 ஆண்டுகளாக தயாரிப்பு தொழில் உறுதியாக வளர்ந்து வருவதை இது காட்டுகிறது. சீனாவில் தயாரிக்கப்படும் தொலைத் தொடர்பு சாதனம், கணிணி, இதர மின்னணு சாதனம் உள்ளிட்ட நவீன பொருட்களின் தர மேம்பாடு குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது. அச்சுடுதல் தொழில், உணவுப் பதனீட்டுத் தொழில் முதலிய பாரம்பரிய தொழில்களின் போட்டி ஆற்றல் மிகவும் தாழ்ந்துள்ளது என்பதை ஆய்வு முடிவு காட்டுகின்றது.
|
|