பல்வேறு சமுதாயங்களுக்கு இடையே தொடர்பை ஏற்படுத்தி உறவை உருவாக்கி உள்ளங்களை ஒன்றிணைக்கும் ஏர் ஒப்பற்ற பணியை வர்த்தகம் செய்து வருகின்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவும் குறிப்பாகத் தமிழமும் சீனாவும் பல்வேறு நாடுகளுடன் வாணிபத் தொடர்புகளை ஏற்படுத்தி வந்துள்ளன. சீனத்துப்பட்டும் தேயிலையும் இந்திய மசாலாப் பொருட்களும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ள வணிகப் பொருட்களாக மட்டுமல்ல பண்பாட்டுச் சின்னங்களாகவும் திகழ்கின்றன. இந்திய-சீன உறவில் நெருக்கத்துக்கு உதவியாக ஆண்டுதோறும் சீனாவில் இந்திய்த் தயாரிப்புப் பொருட்காட்சி நடைபெற்று வருகின்றது. இந்த 2006ம் ஆண்டிற்கான பொருட்காட்சி கடந்த செப்டம்பர் 8 முதல் 11ம் நாள் வரை பெய்சிங் மாநகரில் உள்ள சர்வதேசப் பொருட்காட்சித் திடலில் நடைபெற்றது. இதில் இந்தியாவில் இருந்து 59 வணிக நிறுவனங்களும் அரசு அமைப்புக்களும் பங்கேற்றன.
பெங்களூரைச் சேர்ந்த மின்னணு மீட்டர் கருவிகளைத் தயாரிக்கும் உயர் தொழில் நுட்ப நிறுவனமான கேடெல் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்தப் பொருட்காட்சியில் பங்கு கொண்டது. அந்த நிறுவனத்தின் நிர்வாகி கே ராஜகோபால் தமது நிறுவனத்தைப் பற்றி விளக்கினார்.
வர்த்தகம் வெற்றிகரமாக நடைபெற மிகவும் இன்றியமையாதது நிதி. எந்த ஒரு நிறுவனமும் அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் தொழில் நடத்துவதற்குத் தேவையான நிதி ஆதாரத்தைச் சொந்தமாகத் திரட்டமுடியாது. இப்படிப்பட்ட நிலையில்தான் கடன் கொடுத்து கைதூக்கிவிட வங்கிகள் வருகின்றன. பணபும் போட்டு எடுக்கும் இடம் என்ற நிலைமாறி வங்கி என்பது லாபம் ஈட்டும் ஒரு வணிகத் தொழிலாக மாறிவிட்டது. அந்த வகையில் மகத்தான வளர்ச்சி காணும் சீனா வங்கிகளுக்கு கவர்ச்சிகரமான ஒரு வணிக மையமாக மாறியுள்ளது. சீனாவில் கிளைகளைத் திறக்க உலக நாடுகளின் வங்கிகள் போட்டி போடும் நிலையில் இந்தியாவும் பின்தங்கி விட வில்லை. இந்தியாவின் SBI வங்கியும் பஞ்சாப் நேஷனல் வங்கியும் இந்தப் பொருட்காட்சியில் அரங்குகளை அமைத்திருந்தன. வங்கித் துறையின் எதிர்பார்ப்பு பற்றி பஜ்சாப் நேஷனல் வங்கி அதிகாரி S。K。ZUISHI கூறுகிறார்.
இன்று புதுப்புது வடிவங்களில் உடை உடுத்துவது தோற்றப் பொலிவைத் தரும் என்ற எண்ணம் வலுவடைந்து விட்டது. இத்தகைய நிலையில் மேற்கத்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டுள்ள சீன இளைஞர்களிடையே இந்தியாவின் ராஜஸ்தான் பஞ்சாப், மத்தியப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களின் நுட்பமான துணி அச்சு வேலைப்பாடுகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சண்டிகர் அருகே மொகாலி என்ற இடத்தில் பாஃஷன் டெக்னாலஜி பூங்கா அமைத்துள்ள BSF என்ற BUSINCESE SCHOOL OF FASHION என்னும் நிறுவனம் சீன இளைஞர்களைக் குறிவைத்து தனது வணிக்க கரத்தை நீட்டியுள்ளது. அதன் முயற்சிகள் பற்றி தலைமை நிர்வாகி ஜகஜித் சிங் கோச்சர் கூறுகிறார்.
இவ்வளவு அதிக அளவில் இந்திய நிறுவனங்கள் இந்த 2006 இந்தியத் தயாரிப்பு பொருட்காட்சியில் பங்கேற்றிருப்பது சீனக் கவர்ச்சி இந்திய உள்ளங்களில் ஆழப்பதிந்து விட்டதை எடுத்துக் காட்டுகின்றது. இந்த வகையில் இது இந்திய-சீன உறவின் நெருக்கத்துக்குக் கிடைத்த வெற்றி எனலாம்.
|