• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-13 10:04:57    
நிகழ்ச்சிகளைக் கேட்டு கருத்துக்களை தெரிவிக்கவும்

cri

வாணி:பரமத்தி வேலூர் வே.ம.தமிழரசு எழுதிய கடிதம். ஜூன் 14ம் நாள் சிகழ்ச்சியில் சீன வானொலியின் இணையதளம் குறித்து விபரம் தெரிவித்தீர்கள். உலகம் சீனாவை கண்டு அறிய ஒரு சன்னல் போல இணையதளம் உதவும் என்றீர்கள். சீனமொழியை பிறமொழிகள் வழியாக கற்பித்தல் பணியும் மேற்கொள்ளப்படும் என்று சொல்லப்பட்டது. இசைப்படம், திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் வழங்கப்படும் என்ற செய்தி பெருமகிழ்வை தந்தது. உலகுக்கு சீனாவின் கலை பண்பாடு நாகரீகம் மற்றும் தொழில் முன்னேற்றம், விவசாய வளர்ச்சி போன்ற வளங்களையும் நலங்களையும் செஞ்சீனத்தின்செம்மாந்த புகழையும் உலகு அறியும் என்பதில் மறுபடியும் மகிழ்கிறேன். தொடர்ந்து ஒலித்த நேயர் நேரம் நிகழ்ச்சி, நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்க இயலாத குறையை அகற்றும் வகையில் அமைந்தது என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: அடுத்து திருநெல்வேலி உடையாம்புளி எஸ். ஆறுமுக நயினார் எழுதிய கடிதம். ஜூன் 24ம் நாளன்று அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் சனிக்கிரகத்தின் துணைக்கோள் பற்றியும், நல்வாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் ஐயோடின் கலந்து உப்பை உணவில் சேர்த்துக்கொண்டால் நல்லது என்றும் அறிந்துகொண்டோம். சீனாவில் நடைபெறும் திருமணங்கள், திருமண முறைகள் பற்றி சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் ராஜாராம் அவர்கள் வழங்கியது கேட்க சுவாரசியமாக இருந்தது. சீனத் திருமணங்கள் பற்றி அறிந்து வியந்தேன் என்று எழுதியுள்ளார். வாணி: அடுத்து உத்திரக்குடி நேயர் சு. கலைவாணன் ராதிகா எழுதிய ஜூன் 23ம் நாள் இடம்பெற்ற சீனாவுக்கு அப்பால் நிகழ்ச்சி பற்றிய கடிதம். அனு மின்சார உற்பத்தி வளர்ச்சிக் குறிக்கோள் பற்றி சீனாவுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கேட்டோம். சீனா ஒவ்வொரு துறையிலும் அபார முன்னேற்றம் பெற்ருள்ளது. குறிப்பாக அனுமிந்துறையில் நல்ல முன்னேற்றம் கண்டு வருவதை நினைத்து பெருமை அடைகிறோம். சீனா 2020ம் ஆண்டுக்குள் 3 அனுமின் உலைகள் கட்டப்படும் என்பதை இலக்காக லட்சியமாக கொண்டுள்ளதையும் அறிந்தோம் என்று எழுதியுள்ளார்.

 க்ளீட்டஸ்: அடுத்து மதுரை, மீனாட்சி நகர் பி.எஸ்.கிருஷ்ணன் எழுதிய கடிதம். சில வாரங்களுக்கு முன் சீன வானொலி பற்றி அறிந்து, சீனாவிலிருந்து தமிழ் வானொலியா என்ற வியப்பில் நிகழ்ச்சிகளைக் கேட்கத் துவங்கி தற்போது தனது பெற்றோருக்கும் பிடித்தமான வானொலியாக சீன வானொலி மாறியதைக் குறிப்பிட்டுள்ள கிருஷ்ணன், தொலைக்காட்சி ரசிகனாக இருந்த நிலை மாறி தற்போது சீன வானொலி நிகழ்ச்சிகளின் ரசிகனாக மாறியுள்ளார். எனக்கு பிடிச்சது தமிழ் கானா, படிக்கலைனா ஆயிடுவோம் வீணா, நானும் ஒரு நாள் வருவேன் சீனா, சீன வானொலி நிலையத்துக்கும் வருவேன் தானா" என்று ஒரு ஒரு கவிதை வசனத்தையும் எழுதியுள்ளார் பட்டதாரி இளைஞர் கிருஷ்ணன்.

வாணி: அன்பு கிருஷ்ணன் அவர்களே. சீன வானொலி நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்கும் ரசிகராகியுள்ளீர்கள் என்பதில் மகிழ்ச்சி. தொடர்ந்து நிகழ்ச்சிகளைக் கேட்டு எமக்கு கடிதங்கள் எழுத மறக்கவேண்டாம். விரைவில் உங்களுக்கு நல்ல வேலை கிடைத்து உங்கள் வாழ்வு வளம் பெற வாழ்த்துகிறோம்.

அடுத்து ஜூன் 29ம் நாள் இடம்பெற்ற கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி பற்றி துரையூர் த. குறிஞ்சிக்குமரன் எழுதிய கடிதம். சீன இந்திய நட்புறவு தொடர்பான நேயர் ரேணுகாதேவியின் கேள்வி அருமை. நிகழ்ச்சியில் இதுபற்றி விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. கி.மு. முதல் நூற்றாண்டு ம்தல் இருநாடுகளும் ஒத்த கருத்துகொண்டுள்ளன, பைமாஸ் கோயில் சீனாவில் உருவான முதல் கோயில், சீன மக்கள் மிக பொறுமையானவர்கள் என்பதெல்லாம் அறியமுடிந்தது. இந்தியப்படங்களை சீன மக்கள் விரும்பிப் பார்ப்பார்கள் என்று கேட்டு மகிழ்ந்தேன். ராஜாராம் அவர்களது முன்னெடுப்பில் சீனாவில் தமிழர்கள் விழா ஒன்றையும் நடத்தியுள்ளனர். என்னைப் பொருத்தவரை இந்தியர் அனைவரும் சுற்றுலா சென்று சீனாவை அறியவேண்டும். விருந்தோம்பலிலும், வரவேற்பிலும் சீனர்களுக்கு நிகர் சீனர்களே அன்பதையும் நிகழ்ச்சி விளக்கியது. பயனுள்ள நிகழ்ச்சி என்று கூறியுள்ளார்.