• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-21 19:31:33    
சீனாவின் பெருஞ்சுவர்

cri

பெருஞ்சுவர், சீனத் தேசத்தின் பெருமை என சீன மக்கள் கருதுகின்றனர். மனிதகுல வரலாற்றில் மாபெரும் திட்டப்பணிகளில் ஒன்றான பெருஞ்சுவர், பண்பாட்டு அம்சங்கள் நிறைந்த உலகப் பண்பாட்டு மரபுச்செல்வமாகும்.

அத்துடன், தனிச்சிறப்பு வாய்ந்த இயற்கைக் காட்சித் தலமும் ஆகும். சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்தப் பெருஞ்சுவர், மிகப் பெரிய அளவிலான பண்டைக் கால ராணுவப் பாதுகாப்பு அரணாகும்.

கி.மு. 221ஆம் ஆண்டில் பேரரசர் சிங்ஸ்ஹுவாங் சீனாவை ஒன்றிணைத்ததை அடுத்து, போரிடும் தேசங்கள் கட்டிய இப்பெருஞ்சுவர் ஒன்றிணைக்கப்பட்டது.

ஹெங் வம்சக் காலத்தில் பெருஞ்சுவரின் நீளம் 10 ஆயிரம் கிலோமீட்டரைத் தாண்டியிருந்தது. முந்தைய பல்வேறு வம்சக் காலங்களில் கட்டப்பட்ட பெருஞ்சுவரின் பெரும்பாலான பகுதிகள் காலம் போகப் போகக் காலப்போக்கில் பாழாகிவிட்டன.

இதுவரை ஒப்பீட்டளவில் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டிருக்கின்ற பெருஞ்சுவர், சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் மிங் வம்சக் காலத்தில் கட்டப்பட்டது.

இந்தக் கம்பீரமான பெருஞ்சுவரை யார் எல்லாம் கட்டியமைத்தனர்?பெருஞ்சுவரை ஆராய்ந்து பாதுகாக்கும் சிறப்பு நிறுவனமான—சீனப் பெருஞ்சுவர் கழகத்தின் தலைமைச் செயலாளர் தொங் யௌஹுவெய் இதற்குப் பதிலளித்தார்.

அவர் கூறியதாவது, பெருஞ்சுவரின் கட்டுமானத்தில் ஈடுபட்பட்டவர்கள், முக்கியமாக 3 வகைகளைச் சேர்ந்தவர். முதலில், போர்வீரர்கள். ஏனெனில், பெருஞ்சுவரைக் கட்டுவது அரசின் செயல்பாடு.

இதனால், இந்த 3 வகைகளைச் சேர்ந்தவர்களில் போர்வீரர்கள் முக்கிய இடம் வகித்தனர். அடுத்து, பேரரசரின் கட்டளைக்கிணங்க பெருஞ்சுவர் கட்டுமானத்தில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளர்கள்.

கடைசியாக, நாட்டின் எல்லைப்புறத்துக்கு அனுப்பப்பட்ட குற்றவாளிகள் என்றார் அவர். பெருஞ்சுவரின் முக்கிய பகுதி, நில அமைவுக்கேற்ப கட்டப்பட்டது. அது பொதுவாக உயர்ந்த மலைத் தொடர்களிலும் சமவெளியிலுள்ள ஆபத்தான(செங்குத்தான)இடங்களிலும் கட்டப்பட்டது.

எதிரிகளின் தாக்குதலை எதிர்கொள்ள இவ்வாறு செய்ய வேண்டியிருந்தது. பெருஞ்சுவரில் ஏராளமான கண்காணிப்பு நிலைகளும் வழிகாட்டும் கோபுரங்களும் இடம்பெற்றுள்ளன.

பெருஞ்சுவரில் காவல் புரியும் ராணுவத் தளபதிகளும் போர்வீரர்களும் கம்பீரமான இப்பெருஞ்சுவரைப் பயன்படுத்தி, தாக்குதல் தொடுக்கும் எதிரிகளுக்குப் பதிலடி அளித்தனர்.

அதிக அளவிலான ஆக்கிரமிப்பாளர்கள் ஊடுருவும் போது, வழிகாட்டும் கோபுரங்களிலுள்ள ஒளிப்பந்தம் ஏற்றப்பட்டதும் தகவல் உடனடியாகப் பரவி தேவைப்படும் உதவிகளைப் பெற்றனர்.

பெருஞ்சுவர் கட்டப்பட்டதை அடுத்து, முக்கிய போர்கள் பல இந்தப் பெருஞ்சுவரின் அடிவாரத்தில் நடைபெற்றன. கடந்த காலத்தில் பாதுகாப்பு அரணாக அமைந்த பெருஞ்சுவரின் பயன்பாடு, தற்போது இல்லை.

பிரபல தொல்பொருள் மரபுச்சிதிலமாக அது மாறியுள்ளது. அது கம்பீரமானது, செங்குத்தானது. இதனால், ஆண்டுதோறும் அதிகமான சீன மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் இவ்விடத்துக்கு வருகை தருகின்றனர்.

பெருஞ்சுவரிலுள்ள பெய்ச்சிங் பகுதி, மிகவும் கம்பீரமானதாகவும் உறுதியாகவும் இருக்கும் பகுதி. பெருஞ்சுவரின் இப்பகுதி பெய்ச்சிங் நகரையும் பேரரசரின் கல்லறையும் பாதுகாக்கும் முக்கிய பணிக்குப் பொறுப்பு ஏற்றது என்பது இதற்குக் காரணம்.

பெய்ச்சிங் புறநகரிலுள்ள பதாலிங், முதியுன், ஸ்மாதைய் ஆகிய இடங்கள், பெருஞ்சுவரில் சுற்றுலாவுக்கான பிரபல காட்சித் தலங்களாகத் திகழ்கின்றன.