சர்வதேச செலாவணி நிதியத்தின் கருத்து
cri
சர்வதேச செலாவணி நிதியம் இன்று சிங்கப்பூரில் "உலகப் பொருளாதாரம் எதிர்பார்ப்பு முன்னாய்வு" அறிக்கையை வெளியிட்டது. அடுத்த ஓராண்டில் சீனப் பொருளாதாரம் விரைவாக வளர்ந்து, இதர ஆசிய நாடுகளின் பொருளாதாரத்துக்கு பயனளிக்கும் என்று அறிக்கை மதிப்பிட்டுள்ளது. முதலீடும் ஏற்றுமதியும் அதிகரிப்பதால், இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் சீனப் பொருளாதார வளர்ச்சி 11.3 விழுக்காட்டை எட்டியுள்ளது என்று அறிக்கை கூறுகின்றது. இவ்வாண்டிலும், அடுத்த ஆண்டிலும் இது 10 விழுக்காடாக இருக்கக்கூடும். புதிதாக உருவெடுத்துள்ள ஆசியச் சந்தையின் பொருளாதார வளர்ச்சி, பெரிதும், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் பொருளாதாரத்தின் வலுவான வளர்ச்சியுடன் தொடர்புடையது.
|
|