• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-14 08:35:49    
ஆசியாவில் முதலாவது உயரமான பெண்மனி

cri

மே திங்கள் 12ஆம் நாள் சீனாவின் அன்ஹுய் மாநிலத்தின் சூச்செங் மாவட்டத்தின் சூச்சா பட்டினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அன்ஹுய் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள மருத்துவ மனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. யோ தே பென் என்ற இந்தப் பெண்ணின் உயரம் 2.36 மீட்டர். வயது 34. அவர் 15 வயதான போதே, 2.04 மீட்டர் உயரம் வளர்ந்து விட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக யோ தே பெண்ணின் உடல் அவ்வளவு நலமாக இல்லை. தலை சுற்றல், உடல் வலி, தள்ளாட்டம். ஏற்பட்டு, படுத்தபடுக்கையானார்.

தனது தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியவில்லை. மே 11ஆம் நாள் அவர் ஒரு அமைப்பின் உதவியுடன் இந்த மருத்துவ மனையில் உடல் பரிசோதனை செய்துக் கொண்டார். இந்த அமைப்பும், அன்ஹுய் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள மருத்துவமனை, ஷாங்கை ருய்ஜின் மருத்துவ மனை ஆகியவையும் ஒன்று சேர்ந்து அவருக்கு சிகிச்சை தரும். உலகில் மிக முன்னேறிய முக்குளிப்புக் கருவி சீனா சுயமாக ஆராய்ந்து தயாரித்த, 7000 மீட்டர் ஆழமான நீரில் மூழ்கக் கூடிய முக்குளிப்பு கருவி தற்போது ஒட்டுமொத்தமாக பொருத்தும் கட்டத்தில் நுழைந்துள்ளது.

தற்போது இந்த கருவியின் பெரும்பாலான சாதனங்களும், பல்வேறு பிரிவு அமைப்புகளும் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டன. பொருத்தும் பணி அடுத்த ஆண்டு நிறைவேற்றப்படும். இந்த கருவியின் தலைமை சிற்பியும் சீனக் கப்பல் கனத் தொழில் குழுமத்தின் 702 ஆய்வகத்தின் தலைவரும் பேராசிரியருமான சுய் வெய் செங் இதை தெரிவித்தார். இந்த முக்குளிப்பு கருவி, சீனாவின் பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் நாட்டின் முக்கிய அறிவியல் தொழில் நுட்ப நிகழ்ச்சியாகும்.

இது 7000 மீட்டர் ஆழமான நீரில் வேலை செய்யக் கூடியது. இது வெற்றிகரமாக தயாரிக்கப்படுமானல், உலகில் மிகவும் முன்னேறிய முக்குளிப்பு கருவியாக விளங்கும். இந்த கருவியில் மூன்று பணியாளர்கள் செல்லலாம். நீரில் 12 மணிநேரம் வேலை செய்ய முடியும். கருவியின் முன் பகுதியில் பொருத்தப்படும் இரண்டு செயற்கை கைகளால் 75 கிலோ கிராம் கனிமப் பொருட்களைப் பற்றி எடுக்க முடியும்.