• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-15 17:30:39    
அமெரிக்க ஓபன் டென்னிஸ்

cri
கிராண்ட் ஸ்லாம் எனப்படும் டென்னிஸ் விளையாட்டின் பெரிய பரிசுத்தொகை மற்றும் பிரசித்தி பெற்ற போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டப் போட்டிகள் ஆகஸ்ட் 27ம் நாள் தொடக்கம் செப்டம்பர் 10ம் நாள் வரை நடைபெற்றன. இதில் ஆடவர் பிரிவில் ஃபெடரர் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் ஸ்விஸ் நாட்டு ரோஜர் ஃபெடரர் வெற்றி பெற்றார். பெண்கள் பிரிவில் இளம்புயல் மரியா ஷரபோவா வெற்றி பெற்றார்.

ஆடவர் பிரிவில் ரோஜர் ஃபெடரர் இறுதியாட்டத்தில் அமெரிக்காவின் ஆன்டி ராடிக்கை எதிர்கொண்டு 6 - 2, 4 - 6, 7 - 5, 6 - 1 என்ற செட்களில் வெற்றி பெற்றார். இவ்வாண்டின் அமெரிக்க ஓபன் டென்னிஸ் வெற்றியோடு சேர்த்து இவ்வாண்டில் அவர் 3 கிராண்ட் ஸ்லாம் வெற்றிகளை பெற்றுள்ளார். இதுவரை மொத்தம் 9 கிராண்ட் ஸ்லாம் வெற்றிகள் அவரது வசமுள்ளன.

பெண்கள் பிரிவில் அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற ரஷ்யாவின் மரியா ஷரபோவா இறுதியாட்டத்தில் பெல்ஜிய நாட்டின் ஜஸ்டின் ஹெனின் ஹார்டினை 6 - 4, 6 - 4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் செக் குடியரசின் மார்ட்டின் டாம் இந்தியாவின் லியான்டர் பெயஸ் இணை ஸ்வீடனின் ஜோனாஸ் போர்க்மேன், பெலாரஸின் மாக்ஸ் மிர்னியி இணையை 6 - 7, 6 - 4, 6 - 3 என்ற செட்களில் வென்று அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றது.

பெண்கள் இரட்டையர் பிரிவில் ரஷ்யாவின் டினாரா சஃபீனா ஸ்லோவேனியாவின் காட்ரீனா ஸ்ரேபோட்னிக் இணையை பிரான்ஸின் நதாலி டேச்சி ரஷ்யாவின் வேரா ஸ்வோனரேவா இணை 6 - 4, 5 - 7 என்ற செட்களில் வென்றது.

கலப்பு இரட்டையர் பிரிவில் செக் குடியரசின் க்வேடா பெஸ்கே, மார்ட்டின் டாம் இணையை அமெரிக்காவின் மார்ட்டினா நவரத்திலோவ மற்றும் பாப் பிரையன் இணை 2 - 6, 3 - 6 என்ற நேர் செட்களில் வென்றது. மார்ட்டினா நவரத்திலோவா டென்னிஸ் விளையாட்டிலிருந்து இறுதியாக ஓய்வு பெறுவதாக அறிவித்த பின், வெற்றியோடு வீடு திரும்பியுள்ளார்.

மேசை பந்து விளையாட்டில் சீன அணியின் மேன்மை:

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், உலகின் sபல்வேறு நாடுகளைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ், மேசை பந்து விளையாட்டு வீரர்கள் அடங்கிய அணிக்கும், சீன நாட்டின் மேசை பந்து அணிக்கும் இடையில் அன்மையில் நடைபெற்ற ஒரு போட்டியில் சீன அணி வெற்றி பெற்றுள்ளது. உலக அளவில் சீன அணிக்கு பெருமைத் தேடித் தந்த வீரர்களான வாங் லிசின், மா லின். சன் சி ஆகியோர் சீன அணியில் இடம்பெற்றனர். 3 நபர்கள் இடம்பெறும் 2 ஒற்றையர் ஆட்டம், ஒரு இரட்டையர் ஆட்டம் மீண்டும் இரண்டு ஒற்றையர் ஆட்டம் என்ற வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் சீன அணி உலகின் முக்கிய நட்சத்திரங்களைக் கொண்ட அணியை வென்றது. 2 - 1 - 2 என்ற வகையில் ஒற்றையர், இரட்டையர் மீண்டும் ஒற்றையர் ஆட்டம் என்ற முறைமையே 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளிலும் பின்பற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.