• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-28 16:46:37    
பெருஞ்சுவரில் சுற்றுலா

cri

பெய்ச்சிங்கில் அமைந்துள்ள பெருஞ்சுவரின் சில பகுதிகளில் வட பெய்ச்சிங்கிலுள்ள பதாலிங் பெருஞ்சுவர் மிகவும் புகழ் பெற்றது. இவ்விடத்தில் கட்டப்பட்ட பெருஞ்சுவர் மிகவும் உறுதியானது. முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.

பெருஞ்சுவரில் ஏறும் சிறந்த இடம் இது ஆகும். பதாலிங் பெருஞ்சுவர் மலையின் பக்கத்தில் கட்டப்பட்டது. அதில் பெரும் பகுதி நீளமான கருங்கற்களால் கட்டப்பட்டது.

அவற்றின் சராசரி உயரம் சுமார் 8 மீட்டர். பெருஞ்சுவரில் சுமார் ஒவ்வொரு 200 மீட்டர் தொலைவிலும் ஒரு கண்காணிப்பு நிலையம் கட்டப்பட்டது. 22 வயது பிரெஞ்சு நங்கை ஹெலனா பல முறை பதாலிங் பெருஞ்சுவரைப் பார்வையிட்டுள்ளார்.

முதல் தடவையாகப் பெருஞ்சுவரில் ஏறும் போது ஏற்பட்ட உணர்வைத் தாம் என்றுமே மறந்துவிட முடியாது என்றார் அவர். அவர் மேலும் கூறுகிறார், அன்றைய அனுபவம் மறக்கவே முடியவில்லை.

நான் கண்ட பெருஞ்சுவர், ஊர்ந்துசெல்லும் மலைத்தொடரின் உச்சி வழியாக நீடித்திருக்கிறது. பச்சை பசேலென்ற காட்சி கண்களுக்கு விருந்து அளித்துள்ளது. நாங்கள் அடிச்சுவடுகள் மூலம் பெருஞ்சுவரைப் படிப்படியாக ஏறினோம் என்பதை மறக்கவே முடியாது.

பெருஞ்சுவரில் ஏறுவது கடினமாக இருந்த போதிலும் கண் கவரும் காட்சியைக் கண்டுகளித்தோம் என்றார் அவர். பதாலிங் பெருஞ்சுவருக்குக் கிழக்கே, பிரபல முதியுன் பெருஞ்சுவர் அமைந்துள்ளது.

இதுவும் தற்போது வரை செவ்வனே பாதுகாக்கப்பட்டுள்ள பெருஞ்சுவர் பகுதிகளில் ஒன்றாகும். முதியுன் பெருஞ்சுவரில் 3 கோபுரங்கள் ஒரே வரிசையில் நிற்கின்றன.

பெருஞ்சுவர் நெடுகிலும் இத்தகைய காட்சி வேறு எங்கும் காண முடியாது. தவிர, அடர்ந்த மரங்கள் வளர்கின்றமை முதியுன் பெருஞ்சுவரின் தனிச்சிறப்பு. குறிப்பாக வசந்த காலத்தில் இவ்விடத்திலுள்ள காட்சி எழில் மிக்கது.

முதியுன் பெருஞ்சுவரிலிருந்து புறப்பட்டுக் கிழக்கை நோக்கிச் சென்றால், ஸ்மாதைய் பெருஞ்சுவரை அடையலாம். மிகவும் செங்குத்தான மலை அமைவு இப்பெருஞ்சுவரின் சிறப்பு.

பெருஞ்சுவர், வாளில் கட்டப்பட்டது போன்றது. இது பெருஞ்சுவரில் மிகவும் ஆபத்தான பகுதி. தவிர, பெய்ச்சிங்கில் அமைந்துள்ள பெருஞ்சுவரின் பிரபல பகுதிகள் பல உள்ளன.

எடுத்துக்காட்டாக இரண்டு மலைத்தொடர்களுக்கிடையில் அமைந்துள்ள கம்பீரமான சியூன்குவான் பெருஞ்சுவரும் ஆற்று நீர் அருகில் அமைந்துள்ள ஹுவாங்ஹுவாசென் பெருஞ்சுவரும் குறிப்பிடத்தக்கவை.

அவை வேறுபட்ட தனிச்சிறப்பைக் கொண்டவை. பார்வையிடத் தக்கவை. நேயர்கள், பெருஞ்சுவர், ஒரு கம்பீரமான கட்டடம் மட்டுமல்ல. சுமார் ஈராயிரம் ஆண்டு காலச் சமூக மாற்ற வரலாற்று சின்னமாகவும் அது விளங்குகின்றது.

பெருஞ்சுவர், சீனத் தேசத்தின் முதுகெலும்பு என்று சிலர் கூறுகின்றனர். சீன மக்களைப் பொறுத்தவரை, சீனத் தேசத்தின் எழுச்சியைப் பெருஞ்சுவர் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

ஒவ்வொரு முறை பெருஞ்சுவரைப் பார்வையிடும் போது, சீன மக்களில் ஒருவனாகிய நான் பெருமைப்படுகின்றேன் என்று தைவான் பயணி லேய்பாவுசியா கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

பெருஞ்சுவர், தேசத்தின் எழுச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. சீன மக்களின் அறிவுக் கூர்மையையும் பிரதிபலிக்கிறது. வெகு காலத்திற்கு முன்பே கட்டப்பட்ட இவ்வளவு பிரமாண்டமான கட்டடம் இதுவரை உலகில் நிற்பதைக் காணும் போது நீங்கள் பெருமைப்படாமல் இருக்க முடியுமா?என்றார் அவர்.

பெருஞ்சுவருக்குச் செல்லாதவர் வீரர் அல்ல என்ற கூற்று சீனாவில் பரவியிருக்கின்றது. பெருஞ்சுவர், பண்டைகால சீன நாகரீகத்தின் சின்னம் மட்டுமல்ல, மதிப்பு மிக்க உலகப் பண்பாட்டு மரபுச்செல்வமும் ஆகும்.

வாய்ப்பு கிடைத்தால் நேயர்களாகிய நீங்கள் நிச்சயம் பெருஞ்சுவரைப் பார்வையிட வேண்டும். இனி சுற்றுலா பற்றிய தகவலை வழங்குகின்றேன். பெருஞ்சுவரைப் பார்வையிட விரும்பும் பயணிகள், பெய்ச்சிங்கிலிருந்து புறப்படும் சுற்றுலா பேருந்தில் ஏறி அங்கு சென்றடையலாம்.

இத்தகைய பேருந்து நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் டிஅன்மென் உள்ளிட்ட நகர மையப்பகுதியிலிருந்து புறப்படும். காட்சித் தலத்தில் நுழையும் சீட்டு மற்றும் போய்வரும் பேருந்து சீட்டு விலை மொத்தம் சுமார் 100 ரன்மின்பி யுவான்.