
கிழக்கு சீனாவில் சுமார் 2500ஆண்டு வரலாறுடைய பிரபல பண்பாட்டு நகரம் ஒன்று உள்ளது. மனித குலத்தின் தேவலோகமென சீன மக்களால் அழைக்கப்படும் சுசோ நகரம் தான் அது.
தொன்மை வாய்ந்த பூங்கா, இந்நகரின் தனிச்சிறப்பியல்பாகும். இந்நகரில் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ள 60க்கும் அதிகமான பழங்கால பூங்காக்கள் உள்ளன.
இவற்றில் 9, உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. சுசோ நகரில், தொன்மை வாய்ந்த பூங்காக்களை உருவாக்குவதென்ற உருவரைவுக் கருத்தை உலகப் பண்பாட்டு மரபுச் செல்வக் கமிட்டி புகழ்ந்து பாராட்டியுள்ளது.
1997ஆம் ஆண்டு, சுசோ நகரின் சுவொசன் பூங்கா, வான்ஸ் பூங்கா, லியூ பூங்கா, சிங்கப் பூங்கா ஆகியவை, உலகப் பிரபல பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
பின்னர், சாங்லொங் கூடார மண்டபம் உள்ளிட்ட 5 பூங்காக்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. பூங்காவானது, மனிதரும் இயற்கையும் சுமுகமாக இருப்பதற்கு முன் மாதிரியாகும்.
4 பருவ காலங்களில், இப்பூங்காவின் காட்சி வேறுபடுகின்றது. இப்பூங்காவில் வாழ்வோர், 4 பருவ காலங்களின் வேறுபாட்டையும் இயற்கை காட்சியையும் உணரலாம்
|