
சுசோ நகரின் தென் கிழக்கில் அமைந்துள்ள வான்ஸ் பூங்காவின் பரப்பளவு ஒரு ஹெக்டர் கூட இல்லை. எனினும், தலைசிறந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சுசோ நகருக்கு வருகை தரும் பயணிகளில் பலர், வான்ஸ் பூங்காவைப் பார்வையிடவும், சுசோ பூங்காவின் தனிச்சிறப்பை உணரவும் விரும்புகின்றனர்.
இரவில், வருகை தந்தால், இப்பூங்காவின் அழகிய காட்சியை மட்டுமல்ல, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்கலாம். பூங்காவிலுள்ள புல், மலர், மரம், மலை, கல், செங்கல் ஓடு ஆகிய அனைத்தும், உயிரோட்டத்துடன் காணப்படுகின்றன.
16வது நூற்றாண்டு முதல் 18வது நூற்றாண்டு வரை கட்டியமைக்கப்பட்ட இப்பூங்கா, அதன் நுணுக்கமான உருவரைவின் மூலம், சீனப் பண்பாட்டில் நிலவும் இயற்கையிலிருந்து வந்து, இயற்கையைத் தாண்டும் சூழ்நிலை தென்படுகின்றது.
நகரப்பகுதியில், நீர் வழிப் போக்குவரத்தும் தரைப்பாதைப் போக்குவரத்தும் இணைந்து பயன்படுத்தப்படுவதும் ஆறும் வீதியும் இணைந்திருப்பதுமான நகரப் பரவல் நிலைமை அடிப்படையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. யாங்சி ஆற்று முகத்துவாரத்தில் அமைந்துள்ள சுசோ நகரில் விளை நிலம் வளம் மிக்கது.
கால நிலை பரவாயில்லை. போக்குவரத்து வசதியானது. கி.பி, 400ஆம் ஆண்டிலான நிலப்பிரபுத்துவச் சமுதாயத்தில், பணியிலிருந்து விலகி ஓய்வு பெற்ற சீன அதிகாரிகளில் பலர், தமது முதுமைக் காலத்தைக் கழிக்க இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்துப் பூங்கா அமைத்தனர்.
|