
7வது பெய்சிங் புத்தகக் காட்சி இன்று காலை பெய்சிங்கின் Di Tan பூங்காவில் துவங்கியது. "புதிய வாழ்க்கையைப் படிப்பது, பெய்சிங்கைப் புதுப்பிப்பது" என்னும் மையக்கருத்துடன் நடத்தப்படும் இந்தப் புத்தகக் காட்சியில் அதிகமான புகழ் பெற்ற வெளியீட்டு நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. சமார் இரண்டு லட்சம் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்படும். பத்து நாட்கள் நடைபெறும் இந்தப் புத்தக விழாவில், பெய்சிங் பண்பாட்டைப் பிரச்சாரம் செய்யும் நோக்குடன் பத்து முக்கிய அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. "புதிய பெய்சிங், புதிய ஒலிம்பிக் போட்டி" பற்றிய பிரச்சார நாள் பதிப்புரிமை பாதுகாப்பு பிரச்சார நாள் முதலிய எட்டு முக்கிய கொண்டாட்டங்கள் இவ்விழாவில் இடம்பெறுகின்றன. பிரபல எழுத்தாளர்கள் பலரும் வாசகர்களைச் சந்தித்துப் பேசுவார்கள்.
|