• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-15 19:54:32    
திபெத்தில் விருந்தினர் விடுதி அறைவாடகை உயரவில்லை

cri

திபெத்

சிங்காய்-திபெத் ரெயில்வே போக்குவரத்து தொடங்கிய பின், லாசாவிலுள்ள விருந்தினர் விடுதிகளிலும் ஹோட்டல்களிலும் அறை வாடகை அதிகரித்து விட்டதாக பரவிய செய்திகளை திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்தக்கமிட்டியின் தலைவர் மறுத்துள்ளார். அண்மையில் பேசிய அவர், கடந்த இரண்டு திங்களில், லாசா நகரிலும் இதர பிரதேசங்களிலும் விருந்தினர் விடுதிகளின் அறை வாடகையில் பெரிய அதிகரிப்பு இல்லை என்று கூறினார். சுற்றுலா விறுவிறுப்பாக இருக்கும் ஜூலை திங்கள் முதல், 87 விழுக்காட்டு அறைகளில் விருந்தினர்கள் தங்கினர். விநியோகத்துக்கும் தேவைக்குமிடையில் சமநிலை ஏற்பட்டுள்ளது. அறை வாடகையில் இயல்பான ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. விலை அதிகரிப்பு என்ற பிரச்சினை ஏற்படவில்லை என்றார், அவர். தற்போது, திபெத்தின் பல்வேறு இடங்களில் புதிய விருந்தினர் விடுதிகள் கட்டப்படுகின்றன. அடுத்த ஆண்டில் பயணிகளுக்கு மேலும் அதிகமான வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று அவர் தெரிவித்தார்.