சீனாவின் நடுபகுதியின் ஹுய்நான் மாநிலத்தின் சிங் சியாங் மாவட்டத்தில் ச்சிங் வா என்னும் கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தின் வாழ்க்கை பிற கிராமங்களை விட செழுமையாக இருக்கிறது. கிராம வாசிகளின் கூற்றின் படி, இந்த கிராமம், கடந்த காலத்தில் மிக வறுமையாக இருந்தது. ஒரு திறமையுள்ள கிராம தலைவி லீயூ சி வா என்பவர், இப்போதைய மாபெரும் வாழ்க்கை மாற்றத்திற்கு காரணம் ஆவார். இன்றைய சீன மகளிர் நிகழ்ச்சியில், இந்த கிராம தலைவி லீயூ சி வா பற்றி கூறுகிறோம்.
லீயூ சி வா என்பவர், அழகி அல்ல. பருமன் குறையான உயரமான சாதாரண கிராம பெண். 34 ஆண்டுகளுக்கு முன், தற்செயலாக அவருக்கு தமது கிராம தலைவராக பதவி ஏற்கும் வாய்ப்பு கிடைந்தது.
கிங் வா கிராமம், சிங் சியாங் மாவட்டத்திலுள்ள ஒரு இயற்கை கிராமம். முந்நூறு மக்கள் வசிக்கின்றனர். சீனாவில் ஒரு மிக சிறிய கிராமம் ஆகும். 34 ஆண்டுகளுக்கு முன், கிராமத்தின் நிலத்தில் உணவு தானியப் பற்றாகுறை இருந்தது. சீனாவின் மிகவும் பின் தங்கிய பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். கிராமத்திலான ஆண்கள், சுழ்ற்சி முறையில், கிராமத் தலைவராக பதவி ஏற்றனர். ஆனால், அவர்களில் எவரையும், அனைவரும் ஏற்கவில்லை. இந்த நிலைமையில், அவர்கள் ஒரு பெண்மணி தேர்ந்தெடுத்தனர். இதன் விளைவாக லீ சி வா கிராமத் தலைவர் பதவி ஏற்றார்.
துவக்கத்தில், குடும்பத்தினர்களும், அவருக்காக கவலைபட்டனர் ஆனால், அவர் மேற்கொண்ட பணிகள் எல்லோருக்கும் வியப்பூட்டின. முதல் வேலையாக கிராமத்தினர் அனைவரின் உணவுப் பிரச்சினையைத் தீர்த்து வைத்தார். அவர், கிராமத்தில் உள்ள உழைப்பாளிகளுடன் சேர்ந்து, நிலத்தில் பயிர் சாகுபடியில் ஈடுபட்டார். நாள்தோறும் அவர் தலைமையாக நிலத்தில் வேலை செய்தார். இப்படியாக இரண்டாவது ஆண்டில் கிராமத்தினர் அனைவரின் உணவு பிரச்சினை முதல்முறையாக தீர்க்கப்பட்டது.
இது தீர்க்கப்பட்ட பின், வேறு எண்ணம் தோன்றியது அது பற்றி அவர் கூறியதாவது
1973ம் ஆண்டில் உணவு பிரச்சினை தீர்ந்த பின், வறுமையிலிருந்து விடுபடும் பிரச்சினை ஏற்கனவே இருந்து வந்தது. அப்போது கைத் தொழில் செய்வது பற்றி சந்தித்தோம். இதில் நாங்கள் 1979ம் ஆண்டு வரை உறுதியாக இருந்தோம். பின்னர், சீனாவின் கொள்கை மேலும் நன்றாக தளர்த்தால், நாங்கள் துணிவுடன் தொழில் துறையில் ஈடுபடத் துவங்கினோம் என்றார்.
|