• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-20 10:53:34    
தமிழ் மூலம் சீனம் பாடம் 60

cri

ராஜா...... இந்த வகுப்பில் முதலில் கடந்த வகுப்பில் கற்றுக் கொண்ட உரையாடலை மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

கலை......சரி இப்போது முக்கியமாக பயிற்சியில் ஒன்று முதல் பத்து வரை பேசிப் பழகுவோம்.

ராஜா......இதில் கஷ்டம் இல்லை. நான் முதலில் இந்த பத்து எண்களை பேசுகிறேன்.

1 2 3 4 5 6 7 8 9 10

ஈ அர் சான் ஷீ வூ லியூ ச்சீ பா ச்சியூ ஷ்

கலை.....மீண்டு ஒரு முறை சொல்லுங்கள்.

ராஜா.....1 2 3 4 5 6 7 8 9 10

ஈ அர் சான் ஷீ வூ லியூ ச்சீ பா ச்சியூ ஷ்

கலை.....சரி நாம் தொடர்ந்து கடந்த வகுப்பில் கற்றுக் கொண்ட மூன்று வகை பழங்களின் பெயரை குறிப்பிடுங்கள்.

ராஜா.....ஆப்பிள், பிங் கோ, ஆரஞ்சு, ச்சீ ச்சு, வாழைப் பழம், சியான் ச்சியோ அப்படித்தானே.

கலை.....ஆமாம். இந்த மூன்று வகை பழங்களின் பெயர்களை சீன மொழியில் மீண்டும் இரண்டு முறை பேசிப் பாருங்கள்.

ராஜா....நண்பர்களே எங்களுடன் சேர்ந்து இந்த மூன்று பழங்களின் பெயரை குறிப்பிடுங்கள்.

கலை.... பிங்கோ ஆப்பிள்,

ச்சீச்சு ஆரஞ்சு,

சியாங் ச்சியோ வாழைப் பழம்.

கலை.....சரி நாம் கடந்த வகுப்பில் கற்றுக் கொண்ட பாடத்தை நினைவுபடுத்தினோம்.

ராஜா....நாம் இன்று கற்றுக் கொள்ள போகின்ற புதிய வாக்கியங்கள் என்ன?

கலை......ஈ முதல் ஷ் வரை எண்களை நாம் கற்றுக் கொண்டோம். இப்போது 11 முதல் 19 வரை கற்றுக் கொள்ளலாமா. இந்த எண்கள் முதலாவது தமிழ் மூலம் சீனம் பாடநூலின் 33வது பக்கத்தில் இருக்கின்றன. இதில் கவனியுங்கள்.

ராஜா.....வகுப்பு துவங்கு முன் நான் புத்தகத்தை திறந்து முன்கூட்டியே படித்தேன். முதலில் நான் சொல்லலாமா?

கலை.....நல்ல மாணவர். இந்த 9 எண்களை குறிப்பிடுங்கள்.

ராஜா......ஷ் யீ,பதினொன்று, ஷ் அர் பன்னிரண்டு, ஷ் சான் பதின் மூன்று, ஷ் ஸு பதினான்கு, ஷ் வூ பதினைந்து, ஷ் லியு பதினாறு, ஷ் ச்சி பதினேழு, ஷ் பா பதினெட்டு, ஷ் ச்சியூ பத்தொன்பது. கலை நான் குறிப்பிட்ட எண்கள் சரியா?

கலை......சரிதான். இதில் கொஞ்சம் உச்சரிப்பு வித்தியாசம். என்னை பின்பற்றி 11 முதல் 19 வரை குறிப்பிடுங்கள்.

ராஜா.....மெதுவாக குறிப்பிடலாம். நண்பர்களே எங்களை பின்பற்றி கற்றுக் கொள்ளுங்கள்.

கலை..... ஷ் யீ பதினொன்று

ராஜா.... ஷ் யீ பதினொன்று

கலை......ஷ் அர் பன்னிரண்டு

ராஜா..... ஷ் அர் பன்னிரண்டு

கலை.....ஷ் சான் பதின் மூன்று

ராஜா...... ஷ் சான் பதின் மூன்று

கலை.......ஷ் ஸு பதினான்கு

ராஜா...... ஷ் ஸு பதினான்கு

கலை......ஷ் வூ பதினைந்து

ராஜா........ ஷ் வூ பதினைந்து

கலை........ஷ் லியு பதினாறு

ராஜா........ ஷ் லியு பதினாறு

கலை.......ஷ் ச்சி பதினேழு

ராஜா......... .ஷ் ச்சி பதினேழு

கலை........ஷ் பா பதினெட்டு

ராஜா....... ஷ் பா பதினெட்டு

கலை.......ஷ் ச்சியூ பத்தொன்பது.

ராஜா...... ஷ் ச்சியூ பத்தொன்பது.

கலை.....நன்றாக படித்தீர்கள். நாம் மீண்டும் இந்த 9 எண்களை படிக்கலாம்.

ராஜா.....சரி சீக்கிரமாக பயிக்கலாமா?

கலை......வேண்டாம். ஒழுங்கான வேகத்தில் படிக்க வேண்டும்.

கலை......நண்பர்களே. எப்படி இந்த 9 எண்களை கற்றுக் கொண்டீர்களா?

ராஜா.....கலை எனக்கு ஒரு யோசனை சொல்லலாமா?

கலை.....சொலுங்கள்.

கலை..... ஷ் யீ, ஷ் அர், ஷ் சான், ஷ் ஸு, ஷ் வூ,

11 12 13 14 15

ஷ் லியு, ஷ் ச்சி, ஷ் பா, ஷ் ச்சியூ

16 17 18 19

ராஜா.......ஷ் யீ, ஷ் அர், ஷ் சான், ஷ் ஸு, ஷ் வூ,

11 12 13 14 15

ஷ் லியு, ஷ் ச்சி, ஷ் பா, ஷ் ச்சியூ

16 17 18 19