• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-19 10:11:09    
புகைப்பிடிப்பதை நீக்குவதற்கான முயற்சி

cri

ராஜா.....இதற்கு அறிவியல் ஆதாரம் குறைவு. தொடர்புடைய விவுயங்களை அறிந்து கொள்வது மிக முக்கியமானது. உண்மையில் புகைப்பிடிப்பதால் மனிதரின் உடல் நலனுக்கு எந்த நன்மையும் ஏற்படுவது இல்லை.

கலை.....மனவுறுதி தவிர புகைப்பிடிப்பதை கைவிடும் சூழ்நிலை மிகவும் முக்கிய காரணியாகும். தற்போது உலகில் 190க்கும் அதிகமான நாடுகள் "புகையிலை கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில்"சேர்ந்துள்ளன. புகையிலை பற்றிய விளம்பரங்களை பொது இடங்களிலும் செய்தியேடுகளிலும் வெளியிடுவதற்குத் தடை விதிக்கப்படுகின்றது. இது தொடர்பான சட்ட விதிகள் பல்வேறு நாடுகளில் வகுக்கப்படுகின்றன. புகைப் பிடிப்பதை தடுக்கும் ஒட்டுமொத்தச் சூழல் படிப்படியாக உருவாகி வருகின்றது.

ராஜா......சமூகச் சூழல் தவிர ஆதரவளிக்கும் சிறிய குடும்பச் சூழலும் மிகவும் முக்கியமானது. குடும்பத்தினர்கள், அண்டை வீட்டார் நண்பர்கள் ஆகியோரிடம் இப்போது புகைப்பிடிப்பதை கைவிடுவது பற்றிய தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். அவர்களிடமிருந்து ஆதரவு பெற முயற்சிக்க வேண்டும்.

கலை......அதேவேளையில் புகைப்பிடிப்பதை கைவிட விரும்புவோருடன் இணைந்து முயற்சி செய்து ஒருவருக்கு ஒருவர் ஆதரவளித்தால் புகைப்பிடிப்பதை கைவிடுவது எளிதான முயற்சியாகிவிடும்.

ராஜா......மிகவும் தீவிரமாக புகைபிடிப்பவர்களை பொறுத்தவரை புகைப்பிடிப்பதை கைவிடும் போது மருந்து ஆதரவு இன்றியமையாதது. அவர்கள் புகையிலை உட்கொள்வதை நிறுத்திய பின் ஏற்படும் மனச் சோர்வு, பதற்றம், தலைவலி போன்ற நோய் அறிகுறிகளை மருந்து உட்கொள்வதன் மூலம் குறைப்படும். இது கடுமையாக புகை உட்கொள்வோருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

கலை.......இந்த மருந்துகள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன. ஒன்று மிகவும் பரவலாகக் காணப்படும் மிட்டாய் ஆகும். புகை மீது கொண்ட கடும் ஆர்வத்தை மிட்டாய் தின்னுவதன் மூலம் குறைக்கலாம். பயன்படுத்துவது எளிதானது.

ராஜா.....இரண்டாவது நிக்கோட்டின் மருந்தாகும். புகையிலையிலுள்ள நிக்கோட்டின் தொடர்ச்சியாக புகை பிடிக்கும் ஆசையை தூண்டுகின்றது. இந்த நிக்கோட்டினை புகையிலைக்கு பதிலாக ஒரு மருந்தாகப் பயன்படுத்தினால் மனிதரின் உடம்புக்கு தீங்கு விளைவிக்காது.

கலை......மூன்றாவது வழிமுறை என்ன என்றால் Wellbutrin எனும் மருந்து உட்கொள்ள வேண்டும். இது புதிய வகை மருந்து. அதன் பயன்பாடு நிக்கோட்டின் மருந்து போல விளைவை ஏற்படுத்தும்.

ராஜா......புகைப்பிடிப்பதை கைவிடும் மூன்று முக்கிய வழிமுறைகள் பற்றி நாம் விவரித்தோம். புகைப்பிடிப்பதை 6 திங்களுக்கு மேல் கைவிட முடியுமானால் அந்த வெற்றியை நிலைநிறுத்த வேண்டும். மறுப்படியும் புகைப்பிடிப்பதற்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும்.

கலை.....இததகைய வெற்றியை வாழ்க்கையில் சாதாரணமாகக் காணலாம்.

ராஜா......ஆமாம் பெய்சிங்கில் அம்மையார் லோ ஆசிரியராக வேலை செய்கிறார். 30 ஆண்டுகள் புகைப்பிடிக்கும் பவக்கம் கொண்ட அவர் 2004ம் ஆண்டு முதல் புகை பிடிப்பதை கைவிட முயற்சித்தார். ஓராண்டுக்கு பின் அவர் மீண்டும் புகை பிடிக்கத் துவங்கினார். இப்போது நாளுக்கு குறைந்தது 4 சிகரெட் புகைக்க வேண்டும். இது பற்றி அவர் சொல்வதை கேளுங்கள்.

கலை........என் வாழ்க்கையில் வேறு கெட்ட வழக்கம் எதுவும் இல்லை. ஆனால் புகைப்பிடிப்பது நான் திருத்த முடியாத கெட்ட வழக்கம் தான்

ராஜா......மீண்டும் புகைபிடிப்பது பயமானதல்ல. ஆனால் கூச்சம், குற்ற உணர்வு, சந்தேகம் போன்ற உணர்வு புகைப்பிடிப்பவருக்கு ஏற்படக் கூடாது.

கலை.......ஆமாம். புகைப் பிடிப்பதை கைவிடுவதில் குறைந்தது 7 முறை முயற்சி செய்த பின் தான் வாழ்க்கை முழுவதிலும் புகைப்பிடிக்கும் வழக்கம் நீக்கப்படும்.

ராஜா.....ஆகவே நண்பர்களே புகைப்பிடிப்பதை கைவிடும் மன உறுதியில் நின்று மீண்டும் முயற்சி செய்து புகைப் பிடிப்பதற்கு எதிராக போராடுங்கள்.