• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-19 10:11:09    
வெள்ளரிக் கோழி தயாரிப்பு முறை

cri

ராஜா......அப்புறம் வெள்ளரிகாயை எப்படி நறுக்க வேண்டும்?

கலை........வெள்ளரிகாயை இரண்டு பகுதியாக கீறி பிறை நிலா வடிவத்தில் துண்டு துண்டாக வெட்ட வேண்டும். வெள்ளரிகாய் மேல் கொஞ்சம் உப்பு தூவுங்கள். லேசாகக் கிளரிவிட்டு 3 நிமிடம் ஊற விடுங்கள். பின் வெள்ளரிகாயில் சேர்ந்து விட்ட நீரை வடித்துவிட்டு தட்டில் எடுத்து வையுங்கள்.

ராஜா......இந்த காய்களில் சிவப்பு முள்ளங்கியும் உண்டு. இதை எப்படி நருக்க வேண்டும்?

கலை.........இதையும் துண்டு துண்டாக நறுக்க வேண்டும்.

ராஜா........ அப்புறவும் என்ன செய்ய வேண்டும்?

கலை.......கோழிக் கறித்துண்டுகள் பிறை நிலா வடிவத்திலான வெள்ளரிக்காய், சிவுப்பு முள்ளங்கி துண்டு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் மொத்தமாக வையுங்கள். பிறகு சர்க்கரை வினிகர் சாறு உள்ளே ஊற்றுங்கள்.

ராஜா........தோற்றத்தை பார்த்தால் மிகவும் அழகாக இருக்கிறது. வெள்ளை நிற கோழிக் கறி, பச்சை நிற வெள்ளரிகாய், சிவப்பு நிற முள்ளங்கி இவையனைத்தையும் சேர்த்து பிசைந்தால் ருசி கிடைக்குமா?

கலை........இதில் சந்தேம் எதுவும் இல்லை. இந்த காய்கறி தயாரிக்கப்பட்ட பின் ஐஸபெட்டியுள்ளே வைத்து 3 மணி நேரம் கழித்து உண்டால் மேலும் சுவையாக இருக்கும்.

ராஜா........எனக்கு புரிந்தது. காலை எழுந்து முதல் வேலையாக இந்த காய்கறி சமைக்க வேண்டும். அப்புறம் மதியத்தில் இதை சாப்பிடலாம்.

கலை...... வாரத்தின் கடைசி நாளில் விடுமுறை நாளுக்கு தேவைப்படும் உணவு சமைப்பது பற்றிய திட்டம் இருக்க வேண்டும். முன்கூட்டியே தயாரிப்பது நல்லது.

ராஜா......நீங்கள் சொன்னது சரிதான். கோடைகாலத்தில் காய்கறிகளை சமைப்பது மிக கஷ்டம். ஒரு நாள் முன்கூட்டியே சமைத்து வைப்பது நல்லது.

கலை.........ஆமாம். இன்றைக்கு அறிமுகப்படுத்திய வெள்ளரிகாய் சிவப்பு முள்ளங்கி கலந்த கோழி கறி சமையுங்கள். சுவை பாருங்கள். உங்கள் கருத்து ஒரு வரி எழுதுங்கள்.