• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-18 21:38:43    
விளையாட்டுச் செய்திகள்

cri

மேசை பந்து விளையாட்டில் சீன அணியின் மேன்மை: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், உலகின் sபல்வேறு நாடுகளைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ், மேசை பந்து விளையாட்டு வீரர்கள் அடங்கிய அணிக்கும், சீன நாட்டின் மேசை பந்து அணிக்கும் இடையில் அன்மையில் நடைபெற்ற ஒரு போட்டியில் சீன அணி வெற்றி பெற்றுள்ளது. உலக அளவில் சீன அணிக்கு பெருமைத் தேடித் தந்த வீரர்களான வாங் லிசின், மா லின். சன் சி ஆகியோர் சீன அணியில் இடம்பெற்றனர். 3 நபர்கள் இடம்பெறும் 2 ஒற்றையர் ஆட்டம், ஒரு இரட்டையர் ஆட்டம் மீண்டும் இரண்டு ஒற்றையர் ஆட்டம் என்ற வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் சீன அணி உலகின் முக்கிய நட்சத்திரங்களைக் கொண்ட அணியை வென்றது. 2 - 1 - 2 என்ற வகையில் ஒற்றையர், இரட்டையர் மீண்டும் ஒற்றையர் ஆட்டம் என்ற முறைமையே 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளிலும் பின்பற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏதென்ஸ் உலக கோப்பை தடகள போட்டி செப்டம்பர் 16, 17 ஆகிய நாட்களில் ஏதென்ஸில் சர்வதேச தடகள விளையாட்டுச் சம்மேளனத்தின் உலக கோப்பை தடகள போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 110 மீட்டர் தடையோட்டத்தில் உலக சாதனை படைத்தவரான சீனாவின் பறக்கும் மனிதன் லியு சியாங் உட்பட 12 பேர் சீனாவின் சார்பில் கலந்துகொள்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஏதென்ஸ் நகரில்தான் தனது ஒலிம்பிக் தங்க பதக்கத்தை லியு சியாங் பெற்றார். சீன அணியின் 12 பேர் தவிர ஆசியாவின் பிற நாடுகளான, இந்தியா, இலங்கை, ஈரான், தாய்லாந்து, ஜப்பான், பக்ரைன், கத்தார், சவுதி அரேபியா, கசகஸ்தான், மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தடகள வீரர்கள் 52 பேரும் இந்த உலக கோப்பை தடகள போட்டியில் கலந்துகொள்கின்றனர். ஆண்கள், பெண்கள் பிரிவில் தலா 20 பிரிவுகள் என்ற வகையில் மொத்தம் 40 வகையான போட்டிகள் உலக கோப்பை தடகள போட்டியில் நடைபெறும்.