• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-18 20:32:24    
ஜின் ஷானில் வேதியியல் தொழில் துறை

cri

வேதியியல் தொழில் துறையின் வேகமான வளர்ச்சி மட்டும் ஜின் ஷானில் தலைகீழ் மாற்றம் ஏற்படுவதற்கான காரணம் அல்ல. 2003ம் ஆண்டில், புதிய உயர் தொழில் நுட்ப தொழில் துறை மண்டலத்தைக் கட்டி, மின்னணு தகவல், இயந்திர தயாரிப்பு, உயிரி மருந்து, புதிய ரக மூல பொருட்கள் ஆகிய தொழில் துறைகளை வளர்க்கவும், இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை உயர்த்தவும் உள்ளூர் அரசு விரும்புகிறது.

ஜின்ஷான் தொழில் மண்டலத்தின் நிர்வாக கமிட்டி தலைவர் சுன் யீன் லியாங் எமது செய்தியாளரிடம் இம்மண்டலத்தின் தனிச்சிறப்புக்களை விளக்கினார்.

இந்தத் தொழில் மண்டலம், நவீனமயமாக்கம், தனிச்சிறப்புமயமாக்கம், இயற்கைச்சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், எட்டு வசதி மையங்களைச் சேர்த்துள்ளோம். பணியாளர்கள் இங்கே குழுமி, பொழுதுபோக்கு, ஓய்விடங்கள், உணவு விடுதி முதலிய கருவிகளை கூட்டாக பயன்படுத்தலாம். இவ்வாறு, மூலவளத்தைச் சிக்கனமாக பயன்படுத்துவதோடு, தொழில் நிறுவனங்களின் செலவையும் குறைக்கலாம். இது இத்தொழில் மண்டலத்தில் குறிப்பிடத்தக்க சிறப்பு என்றார் அவர்.

ஜின் சான் தொழில் மண்டலம் நிறுவப்பட்ட பிறகு, போக்குவரத்து, தொலைத்தொடர்பு, நீர் வினியோகம், எரியாற்றல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் கட்டுமானத்திற்காக, உள்ளூர் அரசு, சுமார் 100 கோடி யுவான் ஒதுகீடு செய்துள்ளது. இது, அங்கே முதலீடு செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு வசதியான சிறந்த சேவையை வழங்கி, மண்டலத்தின் ஈர்ப்பு திறனை அதிகரித்துள்ளது. தற்போது, இம்மண்டலத்தில் 20 விழுக்காடு கட்டுமானப் பணிகள் முடிந்து விட்டன என்று, சுன் யீன் லியாங் கூறினார்.

தொழில் துறையின் வேகமான வளர்ச்சியோடு, சுற்று சூழலையும் மூலவளத்தையும் ஜின் சான் பேணிகாத்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியான சமூக பொருளாதார வளர்ச்சிக்காக, மாசுபடுவதைக் கட்டுப்படுத்த எப்பொழுதும் முயற்சி செய்யப்படுகிறது என்று, உள்ளூர் அரசின் அதிகாரி லீயு சாங் சியான் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

2003ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை, இம்மண்டலத்தில் சுற்று சூழல் பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. காற்றின் தரத்தைக் கண்காணிக்க சாவடி ஒன்றை நிறுவி, 39 தொழில் நிறுவனங்களில் மாசற்ற எரியாற்றலைப் பயன்படுத்தி, ஏழு முக்கிய ஆறுகளைக் கட்டுப்படுத்தியதால், ஜின் சான்னின் சூழ்நிலை மேலும் மேம்பட்டுள்ளது என்றார் அவர்.

கடலோரமாக இருக்கும் ஒரு மேம்பாட்டைப் பயன்படுத்தி, ஜின் சான் சுற்றுலாப் பொருளாதாரத்தையும் வளர்த்து வருகிறது. கடந்த ஆண்டில், ஜின் சானின் சுற்றுலா வருமானம், 25 கோடி யுவானாக இருந்தது. 4 லட்சத்து 50 ஆயிரம் பயணிகள் இங்கே சுற்றுலாவுக்காக வந்தனர். அண்மையில், 1600 மீட்டர் நீளமான காட்சி சாலையும், கடலோர வணிக சாலையும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில், ஜின் சான்னில், பயணக்கப்பல் CLUB, கடலோர வணிக மற்றும் வர்த்தக மையம் ஆகியவையும் கட்டப்படும்.

கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள ஜின் சானின் மாற்றம் ஒரு துவக்கம் தான் என்று நகரவாசிகள் கருதுகின்றனர். வளர்ச்சித்திட்டங்கள் நிறைவேறுவதுடன், ஷாங்காய் மற்றும் சீனாவில் ஈர்ப்பு ஆற்றல் மிக்க வட்டாரமாக ஜின் சான் மாறும் என்று அவர்கள் நம்புகின்றனர்.