நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவு
cri
நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவை மேலும் அதிகரிக்கும் வகையில், அவற்றுக்காக 300 கோடி யுவான் மதிப்புள்ள சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் அண்மையில் அறிவித்துள்ளது. நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் நிர்வாக மற்றும் தொழில் நுட்ப நிலையை உயர்த்தி, தற்சார்புடன் கூடிய புத்தாக்க ஆற்றலையும், சந்தையில் போட்டியிடும் திறனையும் வலுப்படுத்தி, வேலை வாய்ப்பை வழங்கும் ஆற்றலை அதிகரிக்க, இந்த நிறுவனங்களின் வளர்ச்சி சூழலை சீன அரசு தொடர்ந்து மேம்படுத்தும் என்று நிதி அமைச்சகம் கூறுகின்றது. சீனப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய சக்தியாக நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. பொருளாதாரத்தை வளமாக்கி, வேலை வாய்ப்பை அதிகரித்து, புத்தாக்கத்தை விரைவுபடுத்தி, வர்த்தகத்தை விரிவுபடுத்துவதில் அவை மேலும் முக்கிய பங்காற்றுகின்றன.
|
|