
ஒரு விசித்திரமான நகரம் உண்டு, நகரத்திலுள்ள அனைத்து மக்களும், ஆண்களும் சரி, பெண்களும் சரி ஒரே ஒரு பெயரையே பயன்படுத்துகின்றனர். இதுதான் அந்த நகரத்தின் பெயர். அமெரிக்காவின் அக்கென்சர் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த நகரின் பெயர் பிலி. போபோ, நகரத் தலைவரின் பெயரும் பிலி.போபோ, சிகை அலங்கார கலைஞரின் பெயரும் பிலி. போபோ, இது போல,நகரிலுள்ள அனைவரின் பெயரும் பிலி. போபோ. ஒரே ஒரு வித்தியாசம் என்ன என்றால், ஒரு பெண்ணின் பெயரை கூப்பிடும் போது, பிலி.போபோவை, பெலி. போபோ என்று மக்கள் கூறுவார்கள்.
இந்த நகரில் இருக்கும் போது, ஒருவருடைய பெயரை தவறாக கூப்பிட்டால் என்ன நடைபெறும் என்று கவலைப்பட வேண்டாம். யாரைச் சந்தித்தாலும் நீங்கள் அவரை பிலி. போபோ என்று அழைக்கலாம். ஒரு ஆணை பிலி. போபோ என்று அழைக்கலாம். ஒரு பெண்ணைச் சந்திக்கும் போது பெலி போபோ என்று அவரை கூப்பிடலாம். இந்த பட்டினத்தில் உள்ளவர்கள் அனைவரும் இந்த பெயரைக் கொண்டிருப்பதனால் பெருமை அடைகின்றனர். இவ்வாறு அனைவரும் ஒரு குடும்பத்தினர் போல் மிக நெருக்கமாகவும் அன்பாகவும் வாழலாம்.
வாழ்க்கையில் ஒரே பெயரால் ஏற்படும் பிரச்சினையைச் சமாளிக்க அவர்கள் ஒருவழி வைத்துள்ளனர். எடுத்துக்காட்டாக, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை எண்களால் வித்தியாசப்படுத்துகின்றனர். இதில் வேடிக்கை என்ன என்றால், உலகில் இத்தகைய நகரம் இது மட்டுமல்ல. ஜெர்மனியில் ஒரு நகரில் உள்ள அனைவரும் ஆவ்தோ என்று அழைக்கப்படுகிறார்கள். ஆப்பிரிக்காவின் காங்கோ குடியரசில் சோகோயே எனும் ஒரு பழங்குடியில் அனைவரும் மாவாங் ஆச்சுமு என்று அழைக்கப்படுகின்றனர்.
|