• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-21 09:22:06    
சீன-இந்திய நட்புறவு ஆண்டுக்கான கட்டுரை போட்டி

cri

சீன-இந்திய நட்புறவு ஆண்டுக்கான கட்டுரை போட்டிக்கு திருவானைக்காவல் ஜி.சக்ரபாணி எழுதிய கட்டுரை இதோ

மக்கள் தொகையில் உலகிலேயே சீனா முதல் இடம் வகிக்கின்றது. இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிற்து. இந்திய சீன நாடுகள் இரண்டும் பரந்து விரிந்த ஆசியாவிலேயே மிகப் பெரிய வருங்கால இருவல்லரசுகள். 29.6.2004 அன்று சீன இந்திய சமாதான பஞ்சசீல கொள்கையின் 50வது ஆண்டு விழா பெய்சிங் நகரில் நடைபெற்றது. சீனா 130 கோடி மக்கள் தொகையும் 56 தேசிய இனங்களையும் கொண்ட நாடு. தொழிற் துறையிலும் வர்த்தகம் ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்வதில் வளரும் நாடுகளான சீனாவும் இந்தியாவும் உலகின் வளர்ந்த நாடுகளுடன் போட்டி போட்டு வேகமாக வெற்றி நடைபோடுகின்றன. உலகச் சந்தையில் இரு நாடுகளின் பொருட்கள் விலை குறைவு. மற்றும் நல்லதரம் வாய்ந்த பொருட்கள் என்பதும் இதற்கு ஒரு காரணம். இந்தியாவும் சீனாவும் அந்நிய முதலீடுகளையும் கூட்டு முதலீடு செய்வதையும் ஊக்குவிப்பதில் அதிக கவனம் செலுத்துவதும் ஒரு காரணம். இதில் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் மற்றும் கார் உற்பத்தியில் சீனா முதல் இடம் வகிக்கின்றது. 51 வகையான கார்களை உற்பத்தி செய்து ஏற்றுமதியும் செய்கின்றது. தேயிலை உற்பத்தியிலும் உலகில் முதல் இடம் வகிப்பது சீனாதான். வேளாண்மையில் காய்கறிகள் பழங்கள் மரபணு சோதனை மூலம் உற்பத்தி ஆகின்றன. மற்றும் குளிர் பிரதேச மூலிகை பயிர் உற்பத்தியில் சீனா முதல் இடம் பெறுகின்றது. வெப்பமான பிரதேசத்தில் மூலிகை பயிர் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது. வேளாண்மை தொழில் அதிகரித்து ஏற்றுமதியில் 40 விழுக்காடு அதிகம். கடந்த 25 ஆண்டுகளில் 1.44 கோடி அமெரிக்க டாலர் வளர்ச்சி அடைந்துள்ளது சீனாதான். கடந்த ஆண்டு சீன தலைமை அமைச்சர் வென்சியாப்பாவ் இந்திய விஜயம் செய்த போது பெங்களூரில் டாடா நிறுவனம், விண்வெளி அறிவியல் கழகம் ஆகியவற்றுக்கும் பல முக்கிய நகரங்களுக்கும் சென்று வந்தார். இரு நாடுகளும் அந்நிய முதலீடு மற்றும் கூட்டு முதலீடுகளில் அதிக கவனம் செலுத்துவது இருபது ஆண்டு எல்லை பிரச்சினையைப் பேசித் தீர்த்துக் கொள்வது இரு நாடுகளிடையே பரஸ்பரம் நியாயமான ஒத்துழைப்பு, சமாதானம், நட்புரிமை ஆகியவற்றின் மூலம் இரு நாடுகளின் முன்னேற்றம் வளர்ந்து விட்ட நாடுகளுக்கு ஒரு வியப்பாக உள்ளது. விண் வெளியில் தகவல் தொலைத் தொடர்புக்காக விண்கலம் அனுப்புவதில் அமெரிக்கா முதல் இடம், ஐரோப்பா இரண்டாவது இடம், சீனா மூன்றாவது இடம், இந்தியா நான்காவது இடம், ஜப்பான் ஐந்தாவது இடம், இந்தியாவும் சீனாவும் நிலவுக்கு மனிதனை விண்கலம் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்வதில் அதிக தீவிரம் காட்டுகின்றன. மின் பொருள் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடம். சீனா மூன்றாவது இடம் வகிக்கின்றது. ஆனால் கணிணியில் இந்தியா முதல் இடம் வகிக்கின்றது. கணிணியில் சீனா சற்று பின்னடைவு காட்டுவது மொழி பிரச்சினைதான் கணிணியில் சீனா அதிகம் ஆங்கில மொழியை பயன்படுத்தாதது ஒரு காரணம். கணிணி மென் பொருளில் இரு நாடுகளும் கூட்டு முயற்சியில் உற்பத்தி செய்தால் தகவல் தொலைத் தொடர்பில் மாபெரும் முன்னேற்றம் அடைந்து இரு நாடுகளும் வல்லரசாக விளங்கும். மின் உற்பத்தியில் நீர் மின் உற்பத்தியிலும் அணுமின் தயாரிப்பிலும் சீனா முக்கிய இடம் பெறுகின்றது. இந்தியாவை போல் சீனாவும் அணுமின் உற்பத்திக்காக 8 அணு உலைகளை வெளிநாட்டில் வாங்கியது. மற்ற மூன்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை. சீனாவுடன் அரசியல் பொருளாதாரம் வர்த்தக ரீதியில் ஒத்துழைப்பை அதிகரித்துள்ளோம். ஆனால் இராணுவ ஒத்துழைப்பை இன்னும் அதிகரிக்க வில்லை. இரு நாட்டு கடற்படைகளும் இரண்டு தடவை கூட்டாக பயிற்சியில் ஈடுபட்டன. ஆனால் விமானப் படை மற்றும் தரைப் படைகள் இன்னும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவில்லை. இரு நாட்டு தரைப்படைகளும் எல்லையில் கூட்டாக போர் பயிற்சியில் ஈடுபடும் என்று இந்திய இராணுவ அமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தி தாளுக்கு அளித்த பேட்டியில் கூறினார். 2006ம் ஆண்டு மார்ச் திங்கள் 5ம் நாள் சீனாவின் 10வது தேசிய மக்கள் பேரவை கூட்டத் தொடரில் அயல்நாட்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை 18 சதவிகிதம் முதல் 20 சதவிகிதமாக உயர்த்துவது அந்நிய முதலீடுகளை ஊக்குவிப்பது வரவேற்கத்தக்க ஒன்று. கல்வி, வேளாண்மை, அறிவியல் தொழிற்துறையில் வளரும் நாடுகளான இந்தியாவும் சீனாவும் ஒரே மாதிரியான மற்றும் வேறுபட்ட அணுகு முறையைப் பின்பற்றுகின்றன. பொருளாதாரம் வர்த்தகம் முதலியவற்றில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 முதல் 10 சதவிகிதமாக முன்னேறி ஆசியாவிலே மிக பெரிய இரு வல்லரசு நாடுகளாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை. வாழ்க! வளர்க!! இந்திய சீன நட்புறவு