
திபெத் மொழியில் தாங்கா என்பது துணியில் அல்லது பட்டுத்துணியில் தீட்டப்பட்ட ஓவியமாகும். கலைப்பொருளான தாங்காவுக்குப் பயன்படுத்தப்படும் வண்ணங்கள், திபெத்தில் புதைந்துகிடக்கும் தாதுப்பொருட்களாலும் விளையும் தாவரைகளாலும் பதனிட்டப்பட்டவை.
பெய்ச்சிங் நகரிலான சாங்அன் வீதியில் சீனத் தேசிய இன மணம் கமழும் கட்டடமான தேசிய இனப் பண்பாட்டு மாளிகை அமைந்துள்ளது. அங்கு, சிறுபான்மை இன ஆடல்பாடல்கள், பிரதேச இசை நாடகம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் அயடிக்கடி நடத்தப்படும் பெரிய கலையரங்கம்
தவிர, தனிச்சிறப்பியல்பு வாய்ந்த அருங்காட்சியகம், நுலகம், கண்காட்சியகம் ஆகியவையும் உள்ளன. சீனாவின் பல்வேறு தேசிய இனங்களின் தொல்பொருட்களும் தரவுகளும் இந்த அருங்காட்சியகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.
திபெத் இன அகத்தில் சேகரிக்கப்பட்ட கலைப்பொருட்கள் பலவிதமானவை. இது பற்றி இந்த அருங்காட்சியகத்தின் தலைவர் சொங்சிங்குவெய் கூறியதாவது, இ ங்கு திரட்டப்பட்டுள்ள திபெத் இனக் கலைப்பொருட்கள், மதப் பயன்பாட்டுப்பொருள், அன்றாட பயன்பாட்டுப் பொருள், கைவினைப் பொருள் ஆகியவற்றுடன் தொடர்புடையவை.

எடுத்துக்காட்டாக, தாங்காவானது, நாங்கள் முக்கியமாகச் சேகரிக்கும் கைவினைப் பொருளாகும். அது, திபெத் இன ஓவியத்தின் சிறந்த பொருள் என்றார் அவர். தாங்கா பெரும்பாலும் மத உள்ளடக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
பல்வகை புத்தர் சிலை, சட்டக்காப்புக் கடவுள் சிலை, மதக்கோயில், மத பிரமுகர், மதக் கதை, கர்ணபரம்பரைக் கதை, செவி வழிக்கதை ஆகியவை இந்த உள்ளடக்கத்தில் இடம்பெற்றுள்ளன. சில தாங்காக்கள் திபெத் வரலாற்றின் முக்கிய நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளன.
வேறு சில இயற்கை அறிவியல், திபெத் மருத்துவவியல், நகர வாழ்க்கை ஆகியவற்றை அவற்றின் உள்ளடக்கமாகக் கொண்டவை. இவை, திபெத்தின் வரலாறு, பண்பாடு, வானியல், மருத்துவவியல் ஆகியவற்றின் வளர்ச்சியை ஆராய்வதற்கு மிகவும் உயிர்த்துடிப்பான தரவுகளை வழங்கியுள்ளன.
தாங்கா எப்பொழுது உருவாக்கப்பட்டது என்பது பற்றி இதுவரையிலும் ஆய்வாளர்கள் ஒத்த கருத்துக்கு வரவில்லை. எனினும், தாங்கா கலையின் முக்கியமான வளர்ச்சி காலம், மிங் மற்றும் சிங் வமிச காலத்தில் முதாவது, கி.பி. 1300ஆம் ஆண்டு முதல் 1900ஆம் ஆண்டு வரையான இரண்டு கால கட்டத்தில் இருந்தது என்று சொங்சிங்குவெய் கூறினார்.

தேசிய இனப் பண்பாட்டு மாளிகையின் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள சில தாங்கா ஓவியங்கள் பற்றி இந்த அருங்காட்சியகத்தின்தொல்பொருள் துறை இயக்குநர் மாசியுமின் கூறியதாவது,
இங்குள்ள தாங்காக்கள் பெரும்பாலானவை, அண்மைக்காலத்திலானவை. ஒவ்வொரு தாங்காவும் முக்கிய வரலாற்றுப் பின்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளது. அவை, மதிப்பு மிக்கவை என்றார் அவர். வரலாற்றை அவற்றின் கருப்பொருளாகக் கொண்ட தாங்கா ஓவியங்கள் தவிர, திபெத் இன மக்களின் தற்கால வாழ்க்கையை வெளிப்படுத்தும்தாங்கா ஓவியங்களும் இங்கு உள்ளன.
1951ல் திபெத் சமாதான முறையில் விடுதலையடைந்த பின் சீன மைய அரசு திபெத் இன மக்களுக்கு மருத்துவர்களையும் மருந்துகளையும் அனுப்புவதையும் தாயகத்தின் கட்டுமானத்தில் அவர்களுக்கு உதவிடும் நிலைமையையும் காட்டும் தாங்கா ஓவியம் ஒன்றும் உண்டு என்றார் அவர்.

திபெத் இன மக்கள் குழுமிவாழும் பிரதேசங்களான மேற்கு சீனாவின் திபெத், சிங்காய் ஸ்சுவான், யுன்னான் ஆகிய இடங்களில் தாங்கா, திபெத் இன மக்ளால் பெரிதும் வரவேற்கப்படும் கலைப்பொருளாகும். முன்பு, கோயில்களில் அது முக்கியமாக தொங்கவிடப்பட்டது. ஆனால், தற்போது, அதிகமான திபெத் இன மக்களின் வீடுகளில் காணப்படுகின்றது.
அன்றி, திபெத் இனப் பண்பாட்டை விரும்பும் இதர தேசிய இன மக்கலும் தாங்காவை விரும்புகின்றனர். திபெத் இன தாங்கா ஓவியர் நாட்டின் பல்வேறு இடங்களில் அடிக்கடி கண்காட்சிகளை நடத்துகின்ரனர். பெய்ச்சிங் நகர மையப் பகுதியிலுள்ள ஹன்ஜி மையத்தில் பெரிய அழகான வண்ணப் படம் என்னும் தாங்கா ஓவியம் ஒன்று அண்மையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இது பற்றி மாசியுமின் கூறியதாவது, திபெத் இன ஓவியர் சொங்செலாஜெ உருவரைந்த இந்த தாங்கா ஓவியத்தின் முழு நீளம் 618 மீட்டர் ஆகும். திபெத்தின் வரலாறு, பண்பாடு, பழக்க வழக்கங்கள், மருத்துவம், மருந்தியல், வானியல், மதப் பிரிவுகள் ஆகியவற்றை இது வெளிப்படுத்துவதாக அவர் கூறினார்.
|