க்ளீட்டஸ்: இன்றைய முதல் கடிதம் பெரம்பலூர், தேவனூர் ப. ஜோதிலட்சுமி எழுதியது. பிப்ரவரி 22ம் நாள் இடம்பெற்ற செய்தித்தொகுப்புகளை கேட்டேன். விவசாயிகளின் நலனுக்கென சீனா எடுத்துவரும் பாதுகாப்பு வசதி, சலுகைகள் மற்றும் அடிப்படை வசதிகள் முதலியவற்றை அறிய முடிந்தது என்று எழுதியுள்ளார்.
வாணி: மே 24ம் நாள் இடம்பெற்ற நிகழ்ச்சிகள் குறித்து எழுதியுள்ளார் சேலம் ஏ. வேலு. செய்திகள், சீனாவின் இணக்கமான வளர்ச்சி என்ற செய்தித் தொகுப்பு, ஜெர்மன் மெர்கல் அம்மையாரில் சீனப்பயணம் பற்ரிய செய்தித் தொகுப்பு, நானும் சீன வானொலி நிலையமும் எனும் பொது அறிவுப்போட்டியின் கட்டுரை ஆகியவற்றை கேட்டேன், நன்றிகள் என்று எழுதியுள்ளார்.
க்ளீட்டஸ்: மே 26ம் நாள் இடம்பெற்ற நட்புபாலம் நிகழ்ச்சி பற்றி சேந்தமங்கலம் ரா. முத்து குமாரசாமி எழுதிய கடிதம். சிறப்பு நேயர் எஸ். எம். ரவிச்சந்திரனின் சீன பயணம் பற்றியும், அவர் தந்த வெள்ளி மோதிர அன்பளிப்பு பற்றியும் அறிவிப்பாளர் அழகாக எடுத்துரைத்தார். ராமாயனத்தில் ராமதூதனாக ஆஞ்சநேயர் அசோகவனத்தில் ராமனின் மோதிரத்தை சீதையிடம் காட்டியது என் நினைவுக்கு வந்தது. எஸ். எம். ரவிச்சந்திரனும் சீன பயணத்தின் மூலம் இந்திய சீன நட்புறவுக்கு பாலத்தை அமைத்தார் என்றே சொல்லவேண்டும் என்று எழுதியுள்ளார்.
வாணி: அடுத்து அபினிமங்கலம் க. அருண் எழுதிய கடிதம். மே 26ம் நாள் இடம்பெற்ற இரு செய்தித் தொகுப்புகளும் சிறப்பாக இருந்தன. அடிப்படை ஆய்வுக்கான உதவித்தொகையை சீனா அதிகரிக்கும் என்ற செய்தித் தொகுப்பின் மூலம் அடிப்படை அறிவியல் ஆய்வுக்கான உதவித்தொகையை அதிகரிப்பது பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும், அறிஞர்கள் எந்த பொருளாதார நெருக்கடியுமின்றி தமது ஆய்வை செம்மையாக செய்யமுடியும் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். அடுத்து பாலஸ்தீன நாட்டை நிறுவவேண்டும் என்ற அபாஸீன் கருத்து பற்றிய செய்தித் தொகுப்பில் கூறப்பட்ட அனைத்து என்னை மிகவும் கவர்ந்தன. மேற்கத்திய நாடுகளால் ஏற்படக்கூடிய பொருளாதாரத் தடையயி தவிர்க்க அபாஸ் முன்மொழிந்த நடவடிக்கையை விளக்கமாக அறிந்தேன். வழங்கிய விஜயலட்சுமி, கலைமகள் ஆகியோருக்கு நன்றிகள் என்று எழுதியுள்ளார்.
க்ளீட்டஸ்: மணமேடு தேவராஜ எழுதிய மே 28ம் நாள் அன்றைய சீன தேசிய இனக்குடும்பம் நிகழ்ச்சி பற்ரிய கடிதம். உய்கூர் இன மருத்துவர் மெஹ்மூத் கஸ்டு அவர்களது மருத்துவ பணி பற்றி கேட்டேன். அனுபவ மருத்துவத்தை தனது அயரா பயிற்சியாலும், பரிசோதனையாலும், உலகறியச்செய்த அவர் உய்கூர் மருத்துவ வரலாற்றில் நீங்கா இடம்பெறுவார் என்பதில் ஐயமில்லை. உய்கூர் இன பாரம்பரிய மருத்துவத்தை அவர் மேலும் பலருக்கு கற்பித்து வருவதும், அரசு ஊக்கமளித்து வருவதும், உய்கூர் மருத்துவம் மேலும் வளர உதவும். அவரது பணி தொடர வாழ்த்துக்கள் என்று எழுதியுள்ளார்.
|