• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-19 16:28:29    
பெய்ச்சிங் மாநகரில் குறுகிய வீதி-ஹூதொங்

cri

ஹூதொங் எனும் குறுகிய வீதியில் நுழையாமல் இருந்தால் பெய்ச்சிங் பற்றி முழுமையாக அறிந்துகொள்வது கடினம். ஹூதொங்கில் நுழையாவிட்டால் பெய்ச்சிங்கிற்கு வருகை தந்ததாக சொல்ல முடியாது.

இத்தகைய கூற்று பெய்ச்சிங்கில் பரவியுள்ளது. பெய்ச்சிங்கிலுள்ள பெரிய சிறிய ஹூதொங்கள் குறுக்கு நெடுக்காக அமைந்துள்ளன. அவை, ரத்தக் குழாய்கள் போல நகரம் முழுவதிலும் உள்ளன.

பெய்ச்சிங் மாநகரக் கட்டமைப்பின் தனிச்சிறப்புகளில் இது ஒன்றாகும். வெளிநாட்டுப் பயணிகள் தொன்மை வாய்ந்த பெய்ச்சிங் பண்பாட்டு மற்றும் வாழ்க்கை பழக்க வழக்கங்களை நேரடியாக உணர வேண்டுமானால், பழைய பெய்ச்சிங்கின் ஹூதொங்கில் நுழைந்து பார்வையிட்டு அறிந்துகொள்வது இன்றியமையாதது ஆகும்.

13வது நூற்றாண்டின் போது, யுவான் வம்சத்தின் தலைநகராக பெய்ச்சிங் தீர்மானிக்கப்பட்ட பின்னர் ஹூதொங் என்னும் குறுகிய வீதி தோன்றியது. அப்போதைய ஆட்சியாளர், மங்கோலிய இனத்தவர். ஹூதொங் என்னும் சொல், மங்கோலிய மொழியிலிருந்து வந்தது. மங்கோலிய மொழியில் ஹூதொங் என்றால் கிணறு என்று பொருள்.

பெய்ச்சிங்கில் துவக்கத்திலே, கிணற்றின் இட அமைப்புக்கு ஏற்ப ஹூதொங் கட்டப்பட்டது. ஏனெனில், ஒவ்வொரு ஹூதொங்கிலும் கிணறு ஒன்று இருக்க வேண்டும் என்று அப்போதைய மக்கள் கருதினர்.

பல நூறு ஆண்டுகால வளர்ச்சி மற்றும் மாற்றத்தினால், தற்போதைய ஹூதொங், வட சீனாவின் நகரங்களில் உள்ள சிறிய வீதிகளின் பெயர் ஆகும். பெய்ச்சிங்கிலுள்ள பெரும்பாலான ஹூதொங்கள் கிழக்கிலிருந்து மேற்காக அமைந்துள்ளன. அவற்றின் அகலம், 9 மீட்டருக்குட்பட்டது.

நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, பெய்ச்சிங் ஹூதொங்கில் வியாபாரி ஒருவர் கூவி அழைத்து விற்பனை செய்யும் குரல். ஹூதொங்கில் வசித்த பெய்ச்சிங் நகரவாசிகள் இந்தக் குரலைக் கேட்டதும் என்ன பொருளை விற்பனை செய்யும் வியாபாரி வந்திருக்கிறார் என்று தெரிந்துகொண்டனர்.

கடந்த காலத்திலே, பெய்ச்சிங் ஹூதொங்கில் இத்தகைய கூவி அழைக்கும் குரல் ஆண்டு முழுவதும் இரவும் பகலும் கேட்டது. அக்காலத்தில் ஹூதொங்கில் வசித்த சாதாரண பெய்ச்சிங் மக்கள் ஹூதொங்கை விட்டு வெளியே செல்லத் தேவையில்லை.

விற்பனை பொருட்களை தோளில் சுமந்த படி வீதியோரங்களில் கூவி விற்கும் வியாபாரிகள் அடிக்கடி காண முடியும் என்பதே இதற்குக் காரணமாகும். ஹூதொங், சாதாரண பெய்ச்சிங் மக்கள் வெளியே செல்வதற்குத் தேவைப்படும் ஊடுவழியாகவும் பொது மக்களின் பழக்க வழக்கங்களைப் பிரதிபலிக்கும் பொருட்காட்சியாகவும் அமைந்துள்ளது.

இது சமூக வாழ்க்கையின் அடையாளம் என்றும் கூறலாம். பெய்ச்சிங்கில் ஏராளமான ஹூதொங்குகள் உள்ளன. இவற்றில் புகழ்பெற்ற ஹூதொங்குகள் 360. பெயர் இல்லாத ஹூதொங்குகளின் எண்ணிக்கை, மாட்டு ரோமம் போல ஏராளமானது. (எண்ண முடியாத அளவாகும்.)

பெய்ச்சிங் ஹூதொங்கைப் பார்க்கும் போது, நரை நிறச் சுவராலும் ஓடுகளாலும் கட்டப்பட்டுள்ளது.. அவை ஒரே மாதியாகக் காணப்படுவதால் தனிச்சிறப்பு இல்லாதது போல் உள்ளன. ஆனால் உண்மையில், ஒவ்வொரு ஹூதொங்கிற்கும் ஒரு தனிக் கதை உண்டு.

அவற்றின் தனிச்சிறப்பு வாய்ந்த பெயர்களின் மூலம், அப்போது ஹூதொங்கில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை நிலையை அறிந்துகொள்ள முடியும். சில ஹூதொங்குகளின் பெயர்கள் மக்களின் விருப்பத்தைப் பிரதிபலித்துள்ளன என்று மக்களின் பழக்க வழக்கங்கள் தொடர்பான துறையின் நிபுணர் லீ மிங்தே கூறினார்.

எடுத்துக்காட்டாக, ஒரு ஹூதொங்கின் வடிவம், மூங்கில் போன்றது. மூங்கில், சீன மொழியில் ZHUGAN என்று அழைக்கப்படுகின்றது. ஒரு ஹூதொங்கின் வடிவம், பண்டைக்கால அதிகாரிகள் அணியும் யுதே போன்றது. ஆகையால் அது யுதே ஹூதொங் என்று அழைக்கப்படுகின்றது என்று லீ மங்தே கூறினார்.

தற்போது, தனிச்சிறப்புடைய தொன்மை வாய்ந்த பெய்ச்சிங் ஹூதொங், பெய்ச்சிங் பண்பாட்டில் ஒரு பகுதியாக மாறியுள்ளது. அதன் தனிச்சிறப்பினால், பல்வேறு இடங்களைச் சேர்ந்த மக்கள் அதனைப் பார்வையிட விரும்புகின்றனர்.