• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-26 15:26:14    
பெய்ச்சிங் ஹூதொங்

cri

ஹூதொங் ஓவியத்தைத் தீட்டுவதில் புகழ்பெற்ற சீன ஓவியர் குவாங்ஹென் பேசுகையில், தென் சீனாவில் வளர்ந்த நான் பெய்ச்சிங் வந்ததும் ஹூதொங்கினால் ஈர்க்கப்பட்டேன் என்றார்.

அவர் மேலும் கூறியதாவது, பெய்ச்சிங்கிலுள்ள ஹூதொங், ஒரு கலை வடிவம் தான். அது, சில நூறு ஆண்டு வரலாறுடையது என்றார். பெய்ச்சிங்கிலுள்ள ஹூதொங்குகள் பற்றி குறிப்பிடும் போது, சாசஹைய் என்னும் ஏரிக்கு அருகிலுள்ள ஹூதொங் பார்வையிடத் தக்கது.

அது, நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. சாசஹைய் என்னும் ஏரி, சியென்ஹை, ஹொஹைய், சிஹைய் ஆகிய மூன்று ஏரிகளால் உருவாக்கப்பட்டது. சியென்ஹையும் ஹொஹையும் இணையும் இடத்தில் ஒரு சிறிய கற்பாலம் உள்ளது.

அதன் பெயர் யின்தின் பாலம். வானில் மேகம் இல்லாத நாட்களில் தொலைவிலுள்ள மலைகள் நமக்குத் தெளிவாக தெரியும். சாசஹைய் எனும் ஏரியின் சுற்றுப்புறத்தில் ஹூதொங்கும் வீடுகள் நிறைந்த வளாகமும் உள்ளன.

இவற்றில் புகழ்பெற்றவர் சிலரின் பழைய வீடுகள் குறிப்பிடத் தக்கவை. அங்கு, சீராகப் பாதுகாக்கப்பட்டுள்ள குங்வான்வு உள்ளிட்ட தனியார் பூங்காக்கள் பார்வையிடத் தக்கவை. கடந்த சில ஆண்டுகளில் நகரக் கட்டுமான வளர்ச்சியினால், பெய்ச்சிங் மாநகரில் உயரமானக் கட்டடங்கள் அதிகரித்துள்ளன.

அதே வேளை, ஹூதொங் என்னும் குறுகிய வீதிகள் குறைந்துள்ளன. தற்போது, தனிச்சிறப்பு வாய்ந்த சில ஹூதொங்குகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையை பெய்ச்சிங் மாநகராட்சி அரசு மேற்கொண்டுள்ளது.

பழைய பெய்ச்சிங் நகரவாசிகளின் வாழ்க்கையை அறிந்துகொள்வதற்குத் துணை புரிய, பெய்ச்சிங் மாநகரச் சுற்றுலா பணியகம், ஹூதொங் சுற்றுலா எனும் பயண நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

பயணிகள் 3 சக்கர சைக்கிளில் ஏறி சுற்றுலா மேற்கொண்டு, வீடுகள் நிறைந்த வளாகத்தில் நுழைந்து, தேநீர் குடித்த வண்ணம், பழைய பெய்ச்சிங் பற்றிய கதையைக் கேட்டறிந்து, அப்போதைய பெய்ச்சிங் மக்களின் வாழ்க்கையை அறிந்துகொள்ள முடியும்.

3 சக்கர சைக்கிள் மூலம் ஹூதொங்கில் சுற்றுலா மேற்கொள்வது வசதியாய் உள்ளது. இது மட்டுமல்ல, ஹூதொங்கை நன்கு பார்வையிடலாம் என்று ஜெர்மனியர் குன்டர் வெய்ன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

இந்தியாவில் இது போன்ற சைக்கிள் கண்டிருந்தேன். இது மிகவும் வசதியானது. ஹூதொங்கில் இத்தகைய சைக்கிளைப் பயன்படுத்துவது நல்லது. இதன் மூலம், ஹூதொங்கிலுள்ள எந்த மூலையையும் சென்றடையலாம். ஆனால் வாடகை கார் மூலம் சென்றால் மூலை முடுக்குகளில் நுழைய முடியாது.

ஹூதொங், பெய்ச்சிங்கின் தனிச்சிறப்பு. வான் முட்டும் கட்டடங்களை விட பழைய பெய்ச்சிங் ஹூதொங்கைப் பார்வையிட மிகவும் விரும்புகின்றேன் என்றார் அவர்.சாசஹைய் என்னும் ஏரி பகுதியில் இத்தகைய 3 சக்கர சைக்கிள் மூலம் ஹூதொங்கில் சுற்றுலா மேற்கொள்வது பெய்ச்சிங்கிற்கு வருகை தரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மிகவும் பிடிக்கும் சுற்றுலா நிகழ்ச்சியாகும்.

இனி, சுற்றுலா பற்றிய தகவலை வழங்குகின்றோம். ஹூதொங்கில் சுற்றுலா பெய்ச்சிங்கில் ஹூதொங்கில் சுற்றுலா என்னும் அலுவலை நடத்தும் சுற்றுலா நிறுவனங்கள் பல உள்ளன. சுற்றுலா நிகழ்ச்சிகள் பின்வருமாறு:

வழிகாட்டியின் உதவியுடன் பயணிகள், பெய்ச்சிங்கிலுள்ள சொங்குலொ என்னும் இடத்தையும் பெய்ச்சிங் மாநகரத் தோற்றத்தையும் பார்வையிடுவது, 3 சக்கர சைக்கிள் மூலம் ஹூதொங்கில் சுற்றுலா மேற்கொள்வது, ஹூதொங்கிலுள்ள புகழ்பெற்றவர்களின் பழைய வீடுகளைக் கண்டுகளிப்பது, வீடுகள் நிறைந்த வளாகத்தில் நகரவாசிகளைச் சந்தித்துரையாடி, சாதாரண சீன மக்களின் வாழ்க்கையை அறிந்துகொள்வது.

ஒரு பயண நிகழ்ச்சிக்கு ஒருவரின் செலவு, 100 முதல் 200 ரன்மின்பி யுவான் ஆகும். நேயர்களாகிய நீங்கள் வாய்ப்பு கிடைத்தால் வருகை தாருங்கள்.