• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-22 20:34:04    
டேவிஸ் கோப்பை டென்னிஸ்

cri

உலகிலு உள்ள நாடுகளை 3 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் 4 குழுக்கள் ஏற்படுத்தி சிறப்பான அணிகள் முதல் இரண்டு குழுக்களில் இடம்பிடிக்க, அவை மண்டல அளவிலும், உலக அளவிலுமாக போட்டியிடும், மற்ற இரண்டு குழுக்கள் வேறு விதமான நடைமுறைகளின் அடிப்படியில் போட்டியில் பங்கு பெறும் என்பதாக அமைந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகளின் ஆசிய ஓசியானிய பகுதியின் முதல் குழுவில் இடம்பெறும் பாகிஸ்தான் சீனா அணிகள் செப்டெம்பர் 22 முதல் 24 வரை இரண்டாம் கட்ட போட்டியில் விளையாடுகின்றன. டேவிஸ் கோப்பைத் தரவரிசையில் 28வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி 39வது இடத்தில் உள்ள சீன அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் சீனா பாகிஸ்தானை வெற்றிகொள்ளாத பட்சம், ஆசியா ஓஷியானிய மண்டலத்தின் முதல் குழுவிலிருந்து நீக்கப்பட்டு இரண்டாம் குழுவில் சேர்க்கப்படும். இதுவரை இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான சந்திப்புகளில் 3 - 1 என்ற கணக்கில் சீனா முன்னிலை வகிக்கிறது. 16 அண்டு கால இடைவெளிக்கு பின் மீண்டும் சீனாவும் பாகிஸ்தானும் டேவிஸ் கோப்பை போட்டியில் சந்திக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டின் டேவிஸ் கோப்பை உலகக்குழுப் பிரிவின் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் மோதுகின்றன. அர்ஜென்டினா ஆஸ்திரேலியாவையும், அமெரிக்கா ரஷ்யாவையும் அரையிறுதியில் சந்திக்க இந்நான்கு நாடுகளின் டென்னிஸ் ரசிகர்கள் ஆர்வமுடன் போட்டிகளைக் காண தயாராகியுள்ளனர். இந்த அரையிறுதி போட்டிகள் செப்டெம்பர் 22 முதல் 24 வரை நடைபெருகின்றன. இரண்டு 4 ஒற்றையார் பிரிவு பந்தயங்கள் ஒரு இரட்டையர் பிரிவு பந்தயம் என 5 பந்தயங்கள் கொண்டது இந்த அரையிறுதிப் போட்டி. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளும், அவற்றின் வீரர்களும் பின்வருமாறு:

அர்ஜென்டினா:

David Nalbandian

Agustin Calleri

Juan Ignacio Chela

Jose Acasuso

ஆஸ்திரேலியா:

Lleyton Hewitt

Mark Philippoussis

Paul Hanley

Wayne Arthurs

ரஷ்யா:

Dmitry Tursunov

Mikhail Youzny

Marat Safin

அமெரிக்கா:

Andy Roddick

James Blake

Mike Bryan

Bob Bryan