• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-27 07:53:38    
குங் இ ச்சி 4

cri

நானாவது, கடை வைப்பதாவது என்று தோன்றியது. அப்புறம் எங்க முதலாளியும் சீரகம், பட்டாணி எல்லாம் கணக்குப் பேரேட்டுல எழுத மாட்டாரு. வேடிக்கையாக இருந்தது. ஆனாலும் அலும்புடன், "உங்கிட்டே யாரு படிப்பா?" என்று வெறுப்போடு கேட்டேன்.

குங் மிருந்த பரவசமாகிவிட்டான். நீண்டு வளர்ந்த இரண்டு விரல் நகங்களை கவுன்ட்டர் மீது தட்டியபடியே 'ரொம்ப சரியாச் சொன்னே' என்று சொல்லி தலையசைத்தான். சிங்கிற எழுத்தை நாலு வகையா எழுதலாம், தெரியுமா? என்றான். எனது பொறுமை மீறிவிட்டது. முகத்தைப் பழிப்புக் காட்டியபடியே அகன்றேன். குங் இ ச்சி மதுக் கோப்பையில் விரலை முக்கி கவுன்ட்டர் மீது அந்த எழுத்துக்களை எழுதிக் காட்டினான். எனக்கு எரிச்சலாக இருந்தது. எனது அலட்சியத்தைக் கண்டு பெருமூச்செறிந்தவாறு அகன்றான். அவன் முகத்தில் ஏமாற்றம் பெரிதாகத் தெரிந்தது.

சில சமயங்களில் அக்கம்பக்கத்துக் குழந்தைகளும் வந்து வேடிக்கை விளையாட்டுக்களில் சேர்ந்து கொள்ளும். தன்னைச் சூழ்ந்து கொல்ளும் அந்தக் குழந்தைகளுக்கு ஆளுக்கு ஒரு பட்டாணிவீதம் கொடுப்பான். அதற்கு மேல் கொடுக்க மாட்டான். குழந்தைகள் பட்டாணியைக் கொறித்து விட்டு, அவன் தின்பதற்காக வைத்துள்ள மீதிபட்டாணியை பார்க்கும். அவன் அதைத் தனது கைகளால் மூடி மறைத்தபடியே, முன்னால் குனிந்து வணக்கமாகச் சொல்வான். "எங்கிட்டே நிறைய இல்லை பிள்ளைகளே!" பிறகு நேராக நிமிர்ந்து நின்றபடி திரும்பவும் பட்டாணியைப் பார்த்தபடி, "நிறைய இல்லே! நிஜமாவே நிறைய இல்லை. நம்புங்க" என்பான். அதைக் கேட்டு குழந்தைகள் கலகல என சிரித்தபடியே கலைந்து செல்லும்.

குங் இ ச்சி இருந்தால் கடை கலகலப்பாக இருந்தது. அவன் இல்லாமலும் நன்றாகத்தான் பொழுது போனது.

ஒரு நாள், நடு இலையுதிர்காலப் பண்டிகைக்கு சில நாட்கள் முன்பாக, மதுக்கடைக்காரர் மிகவும் கஷ்டப்பட்டு கணக்கு வழக்குகளைக் கூட்டிக்கழித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். சுவரில் வைக்கப்பட்டிருந்த பலகையை எடுத்துப் பார்த்துவிட்டு, "குங் இ ச்சி வந்து ரொம்ப நாளாயிடுச்சே! அவன் பத்தொன்பது செப்பு பாக்கி வச்சிருக்கானே" என்றார். அப்போதுதான் எனக்கு உறைத்தது. குங் இ ச்சியைப் பார்த்து எவ்வளவு காலமாகிவிட்டது!

"அவன் எப்படி வருவான்? கடைசியா வாங்குன அடியில கால் ஒடிஞ்சி கிடக்கானே" என்றான் ஒரு வாடிக்கைகாரன்.

"ஆ!"

"ஆமா, அவன் திரும்பவும் திருடுனான். இந்தத் தடவை மாவட்டப் புலவர் டிங் வீட்டுலேயே கை வச்சிட்டான். தப்பிக்க முடியுமா?"

"அப்புறம்?"

"அப்புறம் என்ன? முதல்லே ஒப்புதல் வாக்கு மூலம் எழுத வேணடியிருந்தது. அப்புறம் செமத்தியா அடி வாங்குனான். ராத்திரிபூரா அடிச்சி அவன் காலை ஒடிச்சிட்டாங்க."

"அப்புறம் என்னாச்சு?"

"என்னாகும்? காலொடிஞ்சு கிடக்கான்."

"அதுசரி, அதுக்கு அப்புறம்?"

"அப்புறமாவா? யாருக்குத் தெரியும்? செத்துக்கித்து போயிருப்பான்."