சேவை தொழிலின் வளர்ச்சியை விரைவுபடுத்துவது
cri
எதிர்காலத்தில், சீனாவின் சேவை தொழிலில், வெளிநாட்டு வணிகர்களின் முதலீடு பெரிதும் வரவேற்கப்படும் என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்தக் கமிட்டி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இன்று Shan Dong மாநிலத்தின் Ji Nan நகரில் பேசிய அவர், கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் பொருளாதாரத்தில் சேவைத் தொழிலின் பங்கு பெரிதும் அதிகரித்துள்ளது என்றார். ஆனால், தற்போது, சீனாவில் சேவைத் தொழிலின் மதிப்பு, மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 40 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளது. 64 விழுக்காடு என்ற உலக சராசரியை விட இது மிகவும் குறைவு. சேவைத் தொழிலில், வெளிநாட்டு நிறுவனங்களும், ஹாங்காங், மக்கெள், தைவான் ஆகிய வட்டாரங்களின் தொழில் நிறுவனங்களும் அதிக அளவில் பங்கெடுத்து வருகின்றன. சேவை தொழிலில் வெளிநாட்டு திறப்பை அதிகரித்து, சர்வதேச அளவில் விரிவடைவது, சீனச் சேவைத் தொழிலின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்றும் அவர் சொன்னார்.
|
|