• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-26 20:00:48    
வாழ்க்கையில் அன்பு பத்திரம்

cri

கலை.......வணக்கம் நேயர்களே. இப்போது நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி நேரம். இன்றைய நிகழ்ச்சியில் கலையரசியும் ராஜாராமும் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருப்போரிடம் பரிவு காட்டும் சுன் தான் மருத்துவ மனை பற்றி கூறுகிறார்கள்.



ராஜா......கலை வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் பரிவு காட்டுவது என்றால் என்ன?
கலை......ராஜா இதை ஒரு வாக்கியத்தின் மூலம் தெளிவாக விளக்க முடியாது. நான் உங்களை பெய்சிங்கிலுள்ள சுன்தான் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கே நிலைமையை நேரில் பார்த்த பின் உங்களுக்குப் புரியும்.
ராஜா......அப்படியா. நாம் சீக்கிரமாக நம் நண்பர்களை அழைத்துச் செல்வோம். வாருங்கள் நண்பர்களே.
கலை......வாழ்க்கையின் இறுதியில் இருப்போரிடம் அன்பு காட்டுவது என்றால் புற்று நோய் போன்ற கொடிய நோய்களினால் அல்லல்படுவோருக்கு அவர்களுடைய வாழ்க்கையின் இறுதியில் மக்கள் அவர்களிடம் காட்டும் பரிவாகும்.
ராஜா......நோயாளிகள் அவர்களின் இறுதி நாட்களை நோய்த் துண்பத்தையும் மரணபயத்தையும் மறந்து மகிழ்ச்சியுடன் கழிக்க உதவுவது என்று சொல்லலாம்.
கலை.....சுன் தான் மருத்துவ மனைக்குள் நுழைந்தவுடன் உங்கள் பார்வையில் படுவது பூங்கா. ஆனால் உண்மையில் இங்கே இருப்பது பூங்கா அல்ல. மருத்து மனை தான்.
ராஜா.......வளாகத்தில் முதியோர்களில் சிலர் உட்கார்ந்து பீங்கி ஆப்ரா பாடல்களைப் பாடுகின்னறர். சிலர் உடல் பயிற்சி செய்கின்றனர்.



கலை.......அவர்கள் வெறும் முதியோர்கள் மட்டும் அல்ல. வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் உள்ள நோயாளிகள்.
ராஜா......கலை இது எந்த மாதிரி மருத்துவ மனை?
கலை.......இதுவா?இதில் மருத்துவ மனை, நல வாழ்வுப் பாதுகாப்பு இல்லம், முதியோர் பாதுகாப்பு இல்லம் ஆகிய மூன்றும் இணைந்தது.
ராஜா.........இந்த மருத்துவ மனை எத்தனை ஆண்டுகளாக நடத்தப்படுகின்றது. எந்த வகையான நோயாளிகள் இந்த மருத்துவ மனையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்?
கலை........சுமார் 20 ஆண்டுகளாக நடத்தப்படுகின்ற மருத்துவ மனை இது. பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும் குணமடையாத நோயாளிகள் இங்கே சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
ராஜா......மருத்துவ மனையில் அவர்களுக்கு எந்த வகை சேவை வழங்கப்படுகினிறது?
கலை...... நோயாளிகளின் தெம்பு இழக்காமல் இருக்க 24 மணி நேரத்திலும் உதவியாளர்கள் அவர்களுக்கு சேவை செய்து நோயாளிகளின் மனோபலத்தைத் தூண்டுகின்றனர்.
ராஜா......இந்த மருத்துவ மனையில் எத்தனை நோயாளிதள்? எத்தனை அறைகள்? எத்தனை மருத்துவ ஊழியர்கள் நோயாளிகளுக்கு சேவை புரிகின்றனர்?
கலை.......சுமார் 100 நோயாளி அறைகளில் 320 நோயாளிகள் தங்கியுள்ளனர் அவர்களில் பெரும்பாலோர் முதியவர்களாவர். 100க்கும் அதிகமான மருத்துவ ஊழியர்கள் அவர்களுக்கு சேவை புரின்றனர்.


ராஜா......நீங்கள் அவர்களின் வாழ்க்கையை விவரிக்கலாமா?
கலை........நான் சொல்வதற்கு முன் சுன்தான் மருத்துவ மனையின் மேலாளர் லீ வே என்ன சொல்கிறார் தெரியுமா?
சீனாவில் முதியோரிடம் அன்பும் பரிவும் காட்டி பராமரிப்பது பாரம்பரிய கண்ணோட்டமாகும். நோயாளிகளுக்கு சீரான வாழ்க்கை வளர்ப்பும் வழங்கப்படுகின்றது. ஆனால் வாழ்க்கையின் கடைசிலுள்ள நோயாளரிகளுக்கு வாழ்க்கையிலான் அன்பு மட்டுமல்ல பராமரிப்பும் தேவைபடுகின்றது. ஆகவே அவர்களின் வாழ்க்கையின் கடைசி நாட்களில் அன்பு காட்டுவது மிகவும் முக்கியமானது. இது பற்றி அவர் கூறியதாவது.
ராஜா........குடும்பத்தில் உள்ள மகள்களும் மகன்களும் உடன் பிறப்புக்களும் நோயாளிகளிடம் அன்பு மட்டும் தான் காட்ட முடியும். வாழ்க்கையின் கடைசி நாட்களிலுள்ள முதியோருக்கு பல பல தேவைகள் ஏற்படும். ஆனால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நல்ல சிகிச்சை அனுபவம் கிடையாது. அறிவியல் முறைப்படி பராமரிக்கும் திறனும் அவர்களுக்கு இல்லை. மருத்துவரின் கல்வியறிவும் அவர்களுக்கு இல்லை. ஆகவே நோயாளிகளின் தேவைகளை குடும்பத்தினரால் நிறைவேற்ற முடியாது.