கலை.....வணக்கம் நேயர்களே. இப்போது சீன உணவு அரங்கம் நேரம். ராஜாராம், கலையரசி இருவரும் இந்த நிகழ்ச்சியில் பூசணிக் காய் வடை தயாரிப்பு பற்றி கூறுகின்றார்கள்.
ராஜா.....கலை முன்பு நாம் பூசணிக் காய் லஸ்கார், பூசணிக் காய் பஜ்ஜி என்பது பற்றி சொன்னோம். அண்மையில் நமது வானொலி உணவு விடுதியில் பூசணிக் காய் வடை தின்றேன். அது முற்றிலும் வித்தியாசமான அனுபவம். சிறிய பூசணிக் காய் வடிவில் அழகாகத் தயாரித்தார்கள்.
கலை........ஆமாம். பூசணிக் காய்வடை பார்க்க அழகானது. தின்னவும் சுவையானது.
ராஜா.........நாம் தின்றோம். ருசி தெரிந்தோம். ஆனால் நண்பர்களுக்கு இந்த வடையின் ருசி பற்றி தெரியாது. இன்றைய உணவு அரங்கம் நிகழ்ச்சில் அதைப் பற்றி அறிமுகப்படுத்தலாமா?
கலை.....நீங்கள் சொன்ன படி செய்யலாம்.
ராஜா........இந்த வடை தயாரிப்பதற்கு முதலில் என்னென்ன பொருட்கள் தேவை? முதலில் பூசணிக் காய். அப்புறம்?
கலை........பூச்சணிக் காய் முதலில் தேவைப்படும்
முக்கியமான பொருள். அரை கிலோ பூசணிக் காய்க்கு 100 கிராம் கோதுமை மாவு தேவை. இரண்டு கரண்டி சர்க்கரை போதும்.
ராஜா......இனிப்புக்காக சர்க்கரையா? பூசணியே இனிப்பு தானே. வேறு என்ன வேண்டும்?
கலை........ அரை கிலோ எண்ணெய், கூடவே நல்லெண்ணெய் 1 தேக் கரண்டி.
ராஜா........தேவைப்படும் பொருட்கள் சமையறையின் காய்கறி வெட்டும் பலகைக்கு வந்தாச்சு. அப்புறம் என்ன செய்ய வேண்டும்?
கலை.........இப்போது செய்ய வேண்டிய வேலை என்ன? நன்றாகக் கேளுங்கள். முதலில் பூசணிக் காயை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
ராஜா......கலை பூசணிக் காயின் தோல் நீக்க வேண்டும்? இல்லையா.
கலை......ஆமாம். நீக்க வேண்டும். ஆனால் ஆவி பாத்திரத்தில் வைத்து நன்றாக வேகவைத்தால் பூசணிக் காய் தோல் தானே பிரிந்து விடும். அப்போது தோலை உரிப்பது லேசான வேலை.
|