• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-25 17:38:27    
ஷாங்காய் தடகள போட்டிகள்

cri

செப்டம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் ஷாங்காய் மாநகரில் உலகின் தடகள் விளையாட்டு வீரர்கள் மற்ரும் வீராங்கனைகள் தத்தமது விளையாட்டுகளில் தனித்திறமை வெளிப்படுத்தும் வாய்ப்பையும், புதிய சாதனைகள் படைக்கும் வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்வார்கள். கடந்த வாரத்தில் வாரத்தில் ஏதென்ஸ் நகரில் உலகக் கோப்பை தடகள போட்டிகளும், அதற்கு முந்தய வாரம் ஜெர்மனியின் ஸ்டுட்கர்ட் நகரில் உலக தடகள இறுதிப்போட்டிகளும் நடந்து முடிந்து கிட்டத்தட்ட இவ்வருடத்து தடகள போட்டிகளின் முக்கிய நிகழ்வுகள் இறுதியாயின என்றாலும், ஷாங்காய் தடகள போட்டிகள் வீரர்களை மீண்டும் சாதனைகள் படைக்கவும், உற்சாகத்துடன் அடுத்த ஆண்டில் பங்கேற்ற தயாரிக்கவும் வாய்ப்பளிக்கிறது.

கடந்த வாரம் ஏதென்ஸில் சீனாவின் பறக்கும் மனிதன் என்றழைக்கப்படும் லியு சியாங்கை 110 மீட்டர் தடையோட்ட பந்தயத்தில் வென்ற அமெரிக்காவின் ஆலன் ஜான்சன் இந்த ஷாங்காய் தடகள போட்டியில் லியு சியாங்குடன் பங்கேற்க இருப்பதால் ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. உலக சாதனை படைத்த லியு சியாங், அவரை விட பல ஆண்டுகள் மூத்திருந்தாலும், கால்கள் களைப்படையவில்லை என்று கடந்த வாரம் லியு சியாங்கை வென்று காட்டிய ஆலன் ஜான்சன் இருவரும் போட்டியிடுவது தவிர, அமெரிக்காவின் 400 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர் ஜெரேமி வாரினர், நீளம் தாண்டும் போட்டியில் பங்கேற்கும் டிவை ஃபிலிப்ஸ், நீண்ட தூர ஓட்டப்பந்தய வீராங்கனை எத்தியோப்பியாவின் உலக சாதனையாளர் மெசரத் டெஃபார் குண்டெறிதலில் புகழ் பெற்ற யுக்ரேன் நாட்டு ஒலிம்பிக் சாம்பியன் யூரி பிலோனோ, பஹாமாஸ் நாட்டு 400 மீட்டர் ஓட்டப்பந்தய ஒலிம்பிக் சாம்பியன் டோனிக் வில்லியம்ஸ் ஆகிய தடகள விளையாட்டு பிரபலங்கள் ஷாங்காயில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர்.

பளுத்தூக்கும் போட்டிகள்:

அடுத்த மாதம் டொமினிக்கன் குடியரசு நாட்டில் நடைபெறவுள்ள உலக பளுதூக்கும் சாம்பியன் பட்டப் போட்டிகளுக்கான சீன பளுத்தூக்கும் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்த அணியில் 6 பேர் முதன் முறையாக சர்வதேச அளவில் பங்கேற்கவுள்ளனர். 7 பெண்கள் 8 ஆண்கள் கொண்ட இந்த அணியில், பெண்கள் பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் லியு சுன் ஹொங், ஆண்கள் பிரிவில் உலக சாம்பியன் பட்டம் வென்ற சியு லே, ஷு ஸுயோங், லீ ஹோங்லி ஆகியோர் உள்ளனர். பெண்கள் அணியில் ஐந்து பேர் முதன் முறையாக உலக அளவிலான போட்டியில் பங்கேற்கின்றனர். டொமினிக்கன் குடியரசின் தலைநகர் சான்டோ டொமிங்கோவில் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 8ம் நாள் வரை இந்த உலக சாம்பியன் பளுதூக்கும் போட்டிகள் நடைபெறும்.