• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-25 17:29:15    
ஹேர் குழுமத்தின் U-HOME

cri

சீன சர்வதேச நுகர்வு மின்னணு பொருட்கள் பொருட்காட்சி அண்மையில் சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள ச்சிங் தேள கடலோர நகரில் நடைபெற்றது. உலகெங்கும் இருந்து 400க்கும் கூடுதலான மின்னணு நுகர்வு பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய உற்பத்திப் பொருட்களையும், தொழில்நுட்பத்தையும் கொண்டு வந்து, காட்சிக்கு வைத்தன. புதிய ஒத்துழைப்பு வாய்ப்புக்களைக் கண்டறிய முயன்றன.

தொலைக்காட்சி மூலம் இணையத்தளத்திலும் வரும் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்துக்கொண்டே அதாவது, செல்லிட பேசியையும் கணிணியையும் பயன்படுத்தி, நுகர்வோர் வீட்டிலுள்ள ஏ.சி மற்றும் சலவை இயந்திரத்தைக் கட்டுப்படுத்தி, வீட்டு பயன்பாட்டு மின்சாரக் கருவிகளில் ஏற்பட்ட சிக்கலை சரி செய்யலாம். இந்த நவீன கருவியை சீனாவின் மிக பெரிய வீட்டு பயன்பாட்டு மின்சாரக் கருவிகள் தயாரிப்பு நிறுவனமான ஹேர் குழுமம், பொருட்காட்சியில் வைத்தது. U-HOME என்ற பெயர் கொண்ட இந்தப் புதுவகை மின்சாதனம், மூலம், தடையின்றி தகவல்களைப் பெற முடியும் என்று ஹேர் குழுமத்தின் துணை ஆளுனர் சேள யூன் சியே கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

நுகர்வோரைப் பொறுத்தவரை, குடும்பம் என்றால், இசைவானது, அமைதியானது, உலகுடன் தொடர்பு கொள்வது என்ற பொருளாகும். வெளியூர் சென்று தங்கும் போது, குடும்பம் அருகில் இருக்கிறது. வீட்டுக்கு திரும்பிய பிறகு, இந்த மின் சாதனம் மூலம், உலகுடன் தொடர்பு கொள்ள முடிகிறது என்பது, U-HOME பொருளின் தனிச்சிறப்பாகும் என்றார் அவர்.

சீனாவின் தகவல் தொழிலின் முன்மாதிரியான ரெனொவோ குழுமம், பொருட்காட்சியில் தனது புதிய தயாரிப்பைக் காட்டிக்க வைத்தது. ரெனொவோ குழுமத்தின் துணை ஆளுனர் தூ சியன் ஹுவா செய்தியாளர்களிடம் விளக்குகையில், இந்தப் புதுவகைப் பொருளினால், கணிணியில் வைக்கப்பட்ட படங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை தொலைக்காட்சி பெட்டிக்கு அனுப்பி, கணிணி மற்றும் தொலைக்காட்சி பெட்டியி்ன் பயன்பாட்டை விரிவாக்க முடியும். இதனால், மக்களின் வாழ்க்கை அளவு எல்லையின்றி விரிவாக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

பல தொழில் நிறுவனங்கள் மிகவும் புதிய உற்பத்தி பொருட்களையும் தொழில் நுட்பத்தையும் கொண்டு வந்தன. செல்லிட பேசியிலுள்ள நிழற்படங்களை விரைவில் தெளிவாகக் காட்டும் தொழில் நுட்பம், 50 கிராம் எடையுடைய ஒலிப்பதிவுக் கருவி, சிறப்பு படிப்பு ஸ்கேன் பேனா முதலியவை அனைவரையும் கவர்ந்தன.

இந்தப் பொருட்காட்சிக்கு, சீன வணிக அமைச்சகமும், தகவல் தொழில் அமைச்சகமும், அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகமும் கூட்டாக ஏற்பாடு செய்தன. 2001ம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட பின்னர், அதன் புகழும் தாக்கமும் படிப்படியாக உயர்ந்து வருகின்றன. குறிப்பாக, உலகளவில் மிகப் பெரிய நுகர்வு மின்னணு பொருட்காட்சியான அமெரிக்க நுகர்வு மின்னணு பொருட்காட்சியுடன் வெற்றிகரமாக ஒத்துழைப்பது, சீனாவிலும் ஆசியாவிலும், இப்பொருட்காட்சியின் தகுநிலையை மேலும் உறுதிப்படுத்தி, உலக நுகர்வு மின்னணு தொழிலின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக செல்வாக்கை ஏற்படுத்தியது.