டார் துங்
சீனாவின் பழம்பெரும் தொழில் தளங்களான Liao Ning, Ji Lin, ஹேலுங்கியாங் ஆகிய மூன்று மாநிலங்களின் முக்கிய நகரங்களையும் துறைமுக நகரங்களையும் இணைக்கும் கடலோரச் சாலை போடப்பட்டுள்ளது. Liao Ning மாநிலத்தில் உள்ள டார் துங் நகரம், சீனாவின் மிகப் பெரிய எல்லைப்புற நகராகும். இம்மூன்று மாநிலங்களின் அதிகாரிகள், அண்மையில், "வட கிழக்கு சீனாவின் கிழக்குப் பொருளாதார மண்டல கருத்தரங்கை" நடத்தினார்கள். டார் துங் கடலோரச்சாலை மூலம் பொருளாதாரத்தை மேலும் வளர்க்க விரும்பி, டார் துங் நகருடன் 180 கோடி யுவான் முதலீட்டு மதிப்புள்ள பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர். இப்போது டார் துங் நகரம், உலகின் 50க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 70க்கும் மேலான துறைமுகங்களுடன், கடல் போக்குவரத்தைத் திறந்துள்ளது. தவிரவும், ஹேலுங்கியாங், Ji Lin, Liao Ning ஆகிய மூன்று மாநிலங்களின் கிழக்குப் பகுதியுடன் டார் துங் நகரம் நேரடியாக இணைந்துள்ளது.
|