
தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, குடி மக்களின் விரைவான வருமான வளர்ச்சி ஆகியவற்றால், சீனாவின் சுற்றுலாத் துறையும் தீவிரமாக வளர்ந்துள்ளது. 2020ஆம் ஆண்டில் உலகிலேயே மிக பெரிய சுற்றுலாத் தளமாக சீனா மாறும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். பெய்சிங்கில் நடைபெற்ற, உலக மரபுச் செல்வத் தலங்களில் தொடர் சுற்றுலா வளர்ச்சியும் நிர்வாகமும் பற்றிய சர்வதேச கருத்தரங்கில் உலக சுற்றுலா அமைப்பின் நிபுணர்கள் தெரிவித்த புதிய கருத்து இது.
உலக சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை ஆராய்ந்த உலக சுற்றுலா அமைப்பு இந்த முடிவுக்கு வந்துள்ளது என்று அதன் நிபுணர் ஒருவர் கூறினார். உலகில் சுற்றுலாத் துறை ஏற்கனவே தொடர்ந்து 50 ஆண்டுகளாக வளர்ந்துள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் இது மேலும் வளர்ச்சியடையும். ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன், உலகில் சுற்றுலாத் துறை மிக வளர்ச்சியடைந்த 5 நாடுகளின் பங்கு மொத்த உலகிலும் 71 விழுக்காடாக இருந்தது. தற்போது அது 33 விழுக்காடாக குறைந்து விட்டது. மேலும் அதிகமான நாடுகளும் பிரதேசங்களும் புதிதாக வளர்ச்சி பெற்ற சுற்றுலா இடங்களாக மாறியுள்ளன.
பொருளாதார வளர்ச்சியுடனும் மக்களின் நுகர்வுத் திறன் உயர்வதுடனும் மாபெரும் உள்நாட்டு சந்தையைக் கொண்ட சீனாவுக்கு மேலும் அதிக வளர்ச்சி வாய்ப்பு உண்டு. 2020ஆம் ஆண்டு சீனா உலகில் முதலிடம் வகித்து, மிக பெரிய சுற்றுலா தளமாக மாறும் என்று உலக சுற்றுலா அமைப்பின் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். மிக பெரிய சீன எழுத்து சமீபத்தில் சீனாவின் சென்யாங் மாநகரைச் சேர்ந்த அழகு கையெழுத்துக் கலைஞரான சாங் கோஸ் தாமே தயாரித்த ஒரு எழுது கோலால் 50 மீட்டருக்கும் உயரமான மாபெரும் சீன எழுத்தை எழுதினார்.
டிராகன் என்ற பொருளுடைய இந்த எழுத்தை எழுத அவர் 300 கிலோ கிராம் மையை பயன்படுத்தினார். இந்த மாபெரும் எழுது கோலின் நீளம் 5.6 மீட்டர். இந்த எழுத்துக் கோலின் தலைப் பகுதி மூன்று மனிதர்களின் உயரத்துக்கு சமம். அதில் மையை ஊற்றினால், இந்த எழுதுகோலின் மொத்த் எடை 150 கிலோ கிராமாகும். அவர் சரியாக அரை மணிநேரத்தில் டிராகன் என்ற சீன எழுத்தை எழுதி முடித்தார். இந்த எழுத்து எழுதப்பட்ட பின், 8 ஆடவர்கள் 200 கிலோ கிராம் எடையுடைய ஒரு முத்திரையைப் பதித்தனர்.
|