சீனாவில் சமூக-பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதில் வெளிநாட்டுத் திறப்பின் பங்களிப்புக்கு மேலும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று சீனத் துணை தலைமையமைச்சர் வூ யி அம்மையார் கூறியுள்ளார். இன்று Hu Nan மாநிலத்தின் Chang Sha நகரில், மத்திய சீனாவின் முதலீட்டு வர்த்தகப் பொருட்காட்சியில் உள் நாட்டு வெளிநாட்டு வணிகர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாக்குறுதி அளித்தார். மேலும் ஆக்கப்பூர்வ மனப்பான்மையுடன் உலகை சீனா எதிர்நோக்கி, உள் நாட்டு தேவையை விரிவாக்கும். பொருளாதார வளர்ச்சியில் உள் நாட்டு தேவையின் பங்கு முழுமையாக பயன்படுத்தப்பட்டு, சமூக-பொருளாதார வளர்ச்சியில் வெளிநாட்டு திறப்பின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். 1978ஆம் ஆண்டில், கிழக்கு சீனாவின் கடலோரப்பகுதிகளில் பிரதேசத்தில் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு கொள்கையை சீனா செயல்படுத்த துவங்கியது முதல், சுமார் 66 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் நேரடி அன்னிய முதலீடு பெறப்பட்டுள்ளது.
|