அழகான தைசான் மலை என்ற பாடலை கேட்டு மகிழுங்கள். கிழக்கு சீனாவின் சான்தொங் மாநிலத்தில் அமைந்துள்ள தைசான் மலை, மிகவும் கம்பீரமானது. சீனாவில், முதாலவது மலை என புகழ் பெற்றது. வெகு காலத்துக்கு முன்பிருந்தே, இது மங்கலமான இடமாக கருதப்படுகிறது. 1987ஆம் ஆண்டில், இந்த மலை, யுனேஸ்கோவினால், உலக பண்பாட்டு மற்றும் இயற்கை மரபுச் சின்னமாக உறுதிப்படுத்தப்பட்டது. அழகான தைசான் மலை என்ற பாடலில், இம்மலையின் அழகு பாராட்டப்படுகிறது.
|