• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-27 15:26:14    
நேயர்களின் கருத்துக்கள்

cri

ஈரோடு வெங்கம்பூர் அன்பர்கள் வி.பி.நல்லசிவம், வி.பி.குமார் ஆகியோர் எழுதியது. ஜூன் 12ம் நாள் இடம்பெற்ற குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு குறித்த செய்தித் தொகுப்பைக் கேட்டோம். ஆதரவற்ற நிலையிலும், வறுமை காரணமாகவும் கல்விச் செல்வம் இழந்து தவிக்கும் குழந்தைகளின் வாழ்வு மலர இறைவனை வேண்டுகிறோம். குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்கான முயற்சியில் ஈடுபடும் அனைத்து இதயங்களுக்கும் நன்றிகள் கோடி. அவரவர் தங்களது குடியிருப்புகளை சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தை தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்படவேண்டும். பெற்றோரிடம் கல்வி நலன் குறித்து கருத்துக்களை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அனைவரும் பாடுபடவேண்டும். நிகழ்ச்சியை தொகுத்தளித்த தி.கலையரசி அம்மைஇயாருக்கு நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

க்ளீட்டஸ்: நல்ல ஒரு செய்தித்தொகுப்பின் மூலம் அற்புதமான கருத்துக்கள் நேயர்களை உணர்வுபூர்வமாக தூண்டியுள்ளதை அறிந்து மகிழ்கிறோம். அடுத்து சேலம் ஆ. வேலு ஜூன் 18ம் நாள் ஒலிபரப்பான நிகழ்ச்சிகள் குறித்து எழுதிய கடிதம். செய்தி அறிக்கை, சீன தேசிய இனக்குடும்ப மற்றும் திபெத் இன விமானிகள் பற்ரிய செய்தித் தொகுப்பு ஆகியவை கேட்டேன் நன்றாக இருந்தன. இசை நிகழ்ச்சியில் பேரரசர் எனும் பாடலும், வண்ணத்துபூச்சி எனும் பாடலும், ஓராண்டுக்கு முன் எனும் பாடலும் கேட்டு மகிழ்ந்தேன். அடுத்து ஒலித்த தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியும் நன்று என்று எழுதியுள்ளார்.

வாணி: அடுத்து பெரம்பலூர் உத்திரக்குடி நேயர் கலைவாணன் ராதிகா எழுதிய கடிதம். ஜூன் 20, 27 ஆகிய இரு நாட்கள் வழங்கப்பட்ட சீன பண்பாடு நிகழ்ச்சியில் பேச்சோடு பேச்சாக பேசப்படும் நிறங்கள், பழமொழிகள் குறித்து பல்வேறு செய்திகளை திரு. ராஜாராம் கூறியதை கேட்டறிந்ததோடு சீன மக்களின் நம்பிக்கை செயல்பாடுகளை அறியமுடிந்தது. சீனாவில் வெண்ணிற தாளில் கருப்பு மையினால் எழுதினால் உறுதியான நம்பிக்கைக்கு சமம். ஆனால் தமிழ்நாட்டில் கருப்பு நிறம் துக்கத்தை குறிக்கும் என்பார்கள். அதேபோல பிறந்த ஆண்டிற்கு இணையான விலங்குகளின் நடவடிக்கை செயல்களை வைத்து திருமண பொருத்தம் பார்ப்பது, தமிழ்நாட்டில் திருமணத்திற்கு 7 பொருத்தம் 9 பொருத்தம் என ஜாதகம் பார்ப்பது போல் இருந்தது. விலங்குகளில் அற்புதமானது சீனாவில் எலி, எங்கள் பகுதியில் அதேபோல் மூஞ்சூறுதான் செல்லமானது, அதை யாரும் அடிக்கமாட்டார்கள். சீன பண்பாடு நிகழ்ச்சியின் மூலம் பல புதிய தகவல்களை அறிந்துகொண்டோம், வழங்கிய ராஜாராம் அவர்களுக்கு நன்றிகள் என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: அடுத்து சேந்தமங்கலம் நேயர் கே. அசோக்குமார் ஜூன் 20ம் நாள் ஒலிபரப்பான மலர்சோலை நிகழ்ச்சி குறித்து எழுதிய கடிதம். உலகில் நடைபெறும் பல நாட்டு திருமணங்கள் பற்றி கூறப்பட்டது. பெரும்பாலானவை காதல் திருமணங்களாகவே இருக்கின்றனர். உலகில் பெரும்பான்மை காதல் திருமணங்கள் என்றாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு என்பதை நிகழ்ச்சியின் மூலம் அறிந்தேன். நன்றிகள் என்று எழுதியுள்ளார்.