• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-29 16:33:59    
விளையாட்டுச் செய்திகள்

cri
பூப்பந்து உலக சாம்பியன் போட்டி:

பூப்பந்து (பேட்மின்டன்) விளையாட்டின் உலகத் தரவரிசையில் கடந்த மூன்று ஆண்டுகளாக முன்னனியிலும், பெரும்பாலும் முதலிடத்திலும் இருந்து வரும் சீனாவின் லின் டான், உலக சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை என்ற குறை கடந்த ஞாயிற்றுக்கிழமை நீங்கியது.

ஸ்பெயின் நாட்டு மாட்ரிட் நகரில், மற்றொரு சீன வீரர் பாவ் சுன்லாயுடன் கடந்த ஞாயிறன்று நிகழ்ந்த உலக சாம்பியன் பட்ட இறுதிப்போட்டியில் 18 - 21, 21 - 17, 21 - 10 என்ற செட்களில் வெற்றி பெற்ற லின் டான் உலக சாம்பியனாகியுள்ளார். கடந்த ஆண்டு இந்தோனேஷியாவின் தவ்ஃபீக் ஹிதாயத்திடம் இந்த உலக சாம்பியன் பட்ட இறுதிப்போட்டியில் தோல்வி கண்டபின் தீவிரமாக உழைப்பது என்ற முடிவோடு செய்த பயிற்சியும், முயற்சியும் தற்போது தனக்கு உலக சாம்பியன் பட்டம் பெற உதவியதாக லின் டான் கூறியுள்ளார். அவரது தோழியும், கடந்த ஆண்டு பெண்கள் உலக சாம்பியனுமான சியே சிங்ஃபாங் சக நாட்டு வீராங்கனை ஷாங் நிங்கை 21 - 16, 21 - 14 என்ற நேர் செட்களில் வெற்ரி பெற்று தனது சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார். ஆடவர் இரட்டையர் பிரிவில் 17 ஆண்டுகளாக நழுவிக்கொண்டிருந்த தங்க பதக்கம் இந்த ஆண்டு சீன அணிக்கு கிடைத்தது. இங்கிலாந்து நாட்டு ஆந்தனி கிளார்க், ராபர்ட் பிளேர் இணையை சீனாவின் ஃபூ ஹைஃபங் மற்றும் சய் யுன் இணை 21 - 9, 21 - 13 என்ற செட்களில் வெற்றி பெற்றது. பெண்கள் இரட்டையர் பிரிவிலும் சீன அணிக்கே சாம்பியன் பட்டம் கிடைத்தது. கலப்பு இரட்டையர் பிரிவு தவிர இதர நான்கு பிரிவிலும் சீன வீரர்களும், வீராங்கனைகளும் உலக சாம்பியன் பட்டத்தை பெற்றமை பூப்பந்து விளையாட்டில் சீன அணியின் மேன்மையை உணர்த்துகிறது.

2008 பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகள்

2008ம் ஆண்டு பெய்சிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில், நீச்சல் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளின் இறுதிச் சுற்று காலை வேளையில் நடைபெறும் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. வழமையாக இப்போட்டிகள் மாலையில் நடைபெறும் என்றாலும், சீன நேரத்திற்கும் அமெரிக்க நேரத்திற்கும் இடையே 12 மணி நேர இடைவெளி இருப்பதன் காரணம், நீச்சல் போட்டிகளின் இறுதிச் சுற்று காலையில் நடத்தவேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் அமெரிக்காவின் என் பி சி ஊடக நிறுவனம் கோரியதன் பின்னனியில், அமெரிக்க மக்கள் இப்போட்டிகளை மாலை வேளைக்கு பிறகாக காண வழிசெய்யும் பொருட்டு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பெய்சிங் ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகளின் இறுதிச்சுற்றை பெய்சிங் நேரப்படி காலை 10லிருந்து 11க்குள்ளாக நடத்த முடிவு செய்து அறிவித்துள்ளது. அமெரிக்க தொலைக்காட்சி நேயர்களின் ஆர்வத்தை பாதிக்காதபடி 32 பிரிவுகளாக நடைபெறும் நீச்சல் போட்டிகளின் அனைத்து இறுதிச்சுற்று பந்தயங்களும், ஜிம்னாஸ்டிக்ஸின் 4 விளையாட்டுகளின் இறுதிச் சுற்றும் காலையில் நடைபெறும். மட்டுமல்லாது ஆண்கள் பிரிவு கூடைப்பந்து விளையாட்டு இறுதி போட்டியும் பெய்சிங் நேரப்படி காலையில் நடைபெறும். நேரடி ஒலிபரப்பாக இந்த போட்டிகளை அமெரிக்க மக்கள் பார்க்க வழி செய்யும் இந்த முடிவு தொடர்பாக ஏற்கனவே ஆஸ்திரெலியா உள்ளிட்ட நாடுகள் சிலவற்றின் விளையாட்டு அமைப்புகளும் தடகள வீரர்களும் அதிருப்தியடைந்து குரல் எழுப்பியிருந்தனர். ஆனால் அன்மையில் பெய்சிங்கில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஊடக ஆணையத்தின் வருடாந்திர கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட 2008 ஒலிம்பிக்கின் விளையாட்டு போட்டிகளின் நிகழ்ச்சி நிரல், கால அட்டவனையில் நீச்சல் மற்றும் குறிப்பிட்ட ஜிம்னாஸ்டிக் போட்டிகளின் இறுதி பந்தயங்கள் திட்டமிட்டபடியே காலையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.