சீன மத்திய வங்கியான—சீன மக்கள் வங்கி, அண்மையில் பெய்ஜிங்கில் நாணயக்கொள்கை பற்றிய கூட்டத்தை நடத்தியது. சீனா, சீரான நாணயக்கொள்கையைத் தொடர்ந்து நிறைவேற்றி, கடன் அதிகரிப்பை நியாயமாக கட்டுப்படுத்தி, ரென்மின்பி மாற்று விகிதத்தின் அமைப்பு முறையை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று இக்கூட்டம் கருதியது.
தற்போது, சீனாவின் தேசிய பொருளாதார வளர்ச்சி நிலைமை சீராக இருக்கிறது. ஒட்டுமொத்த கட்டுப்பாட்டின் பயன் காணப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், சீனா, உள்நாட்டுத் தேவையைத் தொடர்ந்து விரிவாக்கி, முதலீட்டு கட்டமைப்பை மேம்படுத்தி, முதலீட்டு அதிகரிப்புக்கு வழிகாட்டி, சர்வதேச வரவு செலவின் சரி சம நிலையை முன்னேற்றுவிக்க வேண்டும் என்றும், ரென்மின்பி மாற்று விகிதத்தில் சந்தை விநியோகம் மற்றும் தேவையின் அடிப்படை பங்கினை ஆற்றி, அதன் அடிப்படை உறுதிப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்றும் மத்திய வங்கி கருத்து தெரிவித்தது.
|