• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-14 19:59:22    
ஆயிரம் புத்தர் சிற்பம் குகை

cri

சின்ச்சியாங்கிலுள்ள பட்டுப்பாதைக்கு அருகில், உலகில் புகழ்பெற்ற பல வாசல்கள், அரண்கள், குகை கோயில்கள், தபால் நிலையங்கள், கல்லறைகள், காவல் சாவடிகள் உள்ளன. கஸ்ல், பாஸ்க்லீக் ஆகிய பெயருடைய ஆயிரம் புத்தர் சிற்பங்கள் கொண்ட 2 குகைகள் மிகவும் புகழ்பெற்றவை. இவற்றின், சிற்பங்களும், சுவர் ஓவியங்களும், சீனா, இந்தியா, போஸ்னியா ஆகிய நாடுகளின் பண்பாட்டை ஒன்றிணைந்த, தனிச்சிறப்புடைய கலை பாணி உடையவை. அப்போதைய பல்வேறு தேசிய இன மக்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை முறைகளை உயிர்த்துடிப்புடன் வெளிப்படுத்துகின்றன. பாஸ்க்லீக் என்பது விவூல் மொழியில், மலை பக்கம் என்பதாகும். இந்த குகை துருபான் நகரின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதிலுள்ள சிற்பங்கள் 600ஆம் ஆண்டு முதல் 1400ஆம் ஆண்டு வரை சிதைக்கப்பட்டன. குகையில் சுவர் ஓவியத்தின் உருவம் சிறப்பானது. நிறம் அழகானது. மனிதரின் உருவம் பருமனாகத் தெரிகின்றது. மோகௌ குகைகளிலுள்ள தாங் வம்ச ஓவியங்கள் தனிச்சிறப்புடையவை. இவை கடுமையாகப் பாதிக்கப்பட்ட போதிலும், இன்னும் 1200 சதுர மீட்டர் பரப்பில் பாதுகாப்பட்டுள்ளன. ஹுய் ஹு புத்தர் மதக் கலையில், மிக முக்கியமான மிகவும் சிறப்பாக பாதுகாக்கப்பட்ட பிரதிநிதித்துவம் வாய்ந்த கலை புதையல் இதுவாகும். மேற்கு சீனாவின் வரலாறு, பண்பாடு, கலை ஆகியவற்றை ஆராய்வதற்கான அரிய பொருளாகும்.