புதுப்பிக்கக்கூடிய எரியாற்றலின் பயன்பாடு
cri
புதுப்பிக்கக்கூடிய எரியாற்றலை பரவலாகப் பயன்படுத்துவதற்கு மத்திய அரசின் நிதி உதவி வழங்கப்படும் என்று சீன நிதியமைச்சகம் அண்மையில் வெளியிட்ட ஆவணம் சுட்டிக்காட்டுகின்றது. எண்ணெய்க்குப் பதிலான புதுப்பிக்கவல்ல எரியாற்றல், சூரிய ஆற்றல், நில வெப்பம் உள்ளிட்ட கட்டிடத்துறையில் பயன்படும் புதுப்பிக்க வல்ல எரியாற்ரல், காற்று ஆற்றல், சூரிய ஆற்றல் உட்பட மின்சார உற்பத்திக்கான புதுப்பிக்கக்கூடிய எரியாற்றல் ஆகிய மூன்று துறைகளுக்கு இலவச நிதியுதவியும், கடனும் வழங்கப்படும் என்று இந்த ஆவணம் விதிக்கின்றது. தற்போது, புதுப்பிக்கக்கூடிய எரியாற்றல் மீதான ஆதரவைச் சீனா வலுப்படுத்தியுள்ளது. இவ்வாண்டு ஜனவரி முதல் நாள் வெளியிட்ட "புதுப்பிக்க வல்ல எரியாற்றல் சட்டத்தை" நடைமுறைப்படுத்தியுள்ளது. இச்சட்டத்தை மேலும் செயல்படுத்துவதற்காகவே இந்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது.
|
|