• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-05 16:28:54    
நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கான நிதி

cri
சீனாவில் நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டில் இந்த சிறப்பு நிதியின் அளவு 300 கோடி யுவானை தாண்டும் என்று எமது செய்தியாளர் சீன நிதி அமைச்சகத்திலிருந்து தெரிவிக்கிறார்.
நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் நிர்வாகத் திறனையும், தொழில் நுட்ப தரத்தையும் உயர்த்தி, தற்சார்புடன் கூடிய புத்தாக்க ஆற்றலையும் சந்தையில் போட்டியிடும் திறனையும் வலுப்படுத்தி, கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்க, சீன அரசு தொடர்ந்து பாடுபடும். அடுத்த 5 ஆண்டுகளுக்குள், இந்நிறுவனங்களின் உற்பத்தி, மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 60 விழுக்காட்டிலிருந்து 65 விழுக்காடாக உயர்த்தப்படும் என்று நிதி அமைச்சகம் கூறுகின்றது.
சீனாவில் உள்ள நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 4 கோடியைத் தாண்டியுள்ளது. இது மொத்த தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் 99.8 விழுக்காடாகும். சீனப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய உந்து சக்தியாக அவை மாறியுள்ளன.