
சீனாவில், இயற்கைச் சூழல் பாதுகாப்பில் குழந்தைகளும் இளைஞர்களும் கலந்து கொள்ளும் அமைப்புக்களின் எண்ணிக்கை, 500க்கும் அதிகமாகி விட்டது. இயற்கைச் சூழல் பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்கும் ஒரு முக்கிய சக்தியாக அவர்கள் மாறியுள்ளனர். ஒவ்வொரு அமைப்பிலும் தலா 300 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இயற்கைச்சூழல் பாதுகாப்பு பற்றி பிரச்சாரம் செய்து, கண்காணிப்பது, நேரில் பார்த்து அறிவது, மரம் நடுதல் பசுமைப்பாதுகாப்பு முதலிய நடவடிக்கைகள் மூலம் இயற்கைச்சூழல் பாதுகாப்பை நடைமுறைப்படுத்துகின்றனர். சுற்றுப்புறங்களிலுள்ள குழந்தைகள்-இளைஞர்களையும் சமூக மக்களையும் செயல்படுமாறு தூண்டுகின்றனர்.
|