சீனாவில் நீர்மண் வளப் பாதுகாப்பு திட்டத்துக்கு உலக வங்கி கடன்
cri
சீனாவின் மிகப் பெரிய நீர் மற்றும் மண் வளப் பாதுகாப்பு திட்டப்பணிக்கு உலக வங்கி கடன் வழங்குகிறது. யுன்னான், கு சோ, ஹுபெய், சூச்சிங் ஆகிய நான்கு இடங்கள் இதனால் பயனடைகின்றன. இந்த 6 ஆண்டுகால திட்டப்பணிக்கு மொத்தம் 20 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்படுகிறது. இதில் பத்து கோடி அமெரிக்க டாலரை உலக வங்கி கடனாக வழங்குகின்றது. இத்திட்டப்பணி மேற்கொள்ளப்படும் மண்டலத்தில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமான இடத்தில் நீர் மற்றும் மண் அரிமாணம் கட்டுப்படுத்தப்படும். 30 விழுக்காட்டுக்கு மேலான இடத்தில் காடுகள் வளர்க்கப்படும். விவசாயிகளின் வருமானமும் 30 விழுக்காட்டுக்கு அதிகரிக்கும்.
|
|