நிலக்கரி அகழ்வில் மண்சரிவு மீதான கட்டுப்பாடு
cri
சீனாவின் வட கிழக்கு பகுதியில் நிலக்கரி அகழும் போது மண்சரிவு ஏற்படாமல் கட்டுப்படுத்த, சீன மத்திய நிதி அமைச்சகம் 300 கோடி யுவான் ஒதுக்கியுள்ளது. இதை சீன அரசவை வட கிழக்கு பகுதி வளர்ச்சி அலுவலகத்தின் தலைவர் Zhang Guo Bao தெரிவித்தார். சீனாவின் முக்கிய நிலக்கரி உற்பத்தி தளமான வட கிழக்குப் பகுதியில், மொத்த நிலக்கரி உற்பத்தியில் 10 விழுக்காட்டுக்கு மேல் உற்பத்தியாகிறது. அங்கு பெருமளவு நிலப் பரப்பில் மண்சரியும் போக்கு தோன்றி, உள்ளூர் மக்களின் வாழ்க்கைக்கு கடும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இப்பிரச்சினையை தீர்க்க, 2002ஆம் ஆண்டில் சீன அரசு நடவடிக்கை மேற்கொள்ள துவங்கியது. அதன் விளைவாக பெருமளவு மண்சரிவு கட்டுப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட பள்ளிகள், மருத்துவ மனைகள் மற்றும் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
|
|